வீராணம் பா.ஜ.க., அதிமுக நிர்வாகிகள் 25 பேர் திமுகவில் இணைந்தனர் .!
தென்காசி
வீராணம் பா.ஜ.க., அதிமுக நிர்வாகிகள் 25 பேர் திமுகவில் இணைந்தனர்
தென்காசி, நவ.11
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் வீராணம் பகுதியை சேர்ந்த மாற்றுக்கட்சியினர் ஒன்றிய பொறுப்பாளர் சேக்முகமது ஏற்பாட்டில், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் முன்;னிலையில் திமுகவில் இணைந்தனர்.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் வீராணம் பகுதி பா.ஜ.க., மற்றும் அதிமுகவை சேர்ந்த மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆலங்குளம் மத்திய ஒன்றிய திமுக பொறுப்பாளரும், ஒன்றிய கவுன்சிலருமான சேக்முகமது ஏற்பாட்டில் பா.ஜ.க. விளையாட்டு மேம்பாட்டு அணி ஒன்றிய தலைவர் அருணாசலம், கிளைச் செயலாளர் மாணிக்கம், விளையாட்டு மேம்பாட்டு அணி ஒன்றிய செயலாளர் மணிகண்டன், பட்டுராஜ், ஒன்றிய வர்த்தக பிரிவு, அண்ணாமலை மற்றும் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட 25 பேர் அக்கட்சிகளில் இருந்து விலகி, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். பாஜக மற்றும் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்து அனைவருக்கும் மாவட்ட பொறுப்பாளர் சுரண்டை வே. ஜெயபாலன் கைத்தறி ஆடைகளை அணிவித்து வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் தென்காசி டாக்டர் கலை கதிரவன், கடையநல்லூர் குணசேகரன், கீழப்பாவூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் ரமேஷ், வீராணம் கிளை செயலாளர் பாலசுப்பிர மணியன், சார்பு அணி நிர்வாகிகள் ராம்ராஜ், முத்துசுப்ரமணியன், பிரேம்குமார், நிர்வாகிகள் வெள்ளத்துரை, சதாம் உசேன், துரைராஜ், அன்சார் அலி, முத்தலிப்பு உட்பட பலர் கலந்து . கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்
