அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின்.!
திமுக vs தவெக
திமுக, அதிமுக, நாம் தமிழர் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். தவெக வேகம் காட்டுவதில்லை. ஜனநாயகன்படம் லீக், திமுக . தவெக இடையே தான் போட்டி என்கிற விஜய் கருத்து தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேள்வி வைக்கப்பட்டது. அதற்கு அவர் ஒரே வரியில் அளித்து பதில் வைரலாகி வருகிறது.
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நடைபயிற்சி செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். டிஷர்ட், டிராக் பேன்ட் அணிந்து திமுக மற்றும் கூட்டணி கட்சியினருடன் இணைந்து அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பரமக்குடி மக்களிடம் உரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
எடப்பாடி பழனிசாமி அவதூறு
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின், "அதிமுகவின் முகமூடியை போட்டு கொண்டு தானே பாஜக தமிழ்நாட்டிற்குள் வருகிறது. அதுதான் உண்மை. அதனால் தான் இது தமிழ்நாட்டிற்கும், டெல்லிக்குமான தேர்தல் என்கிறேன். மக்கள் என்னை உற்சாகமாக சந்திக்கிறார்கள். நானும் அவர்களை உற்சாகமாக சந்திக்கிறேன். நாங்கள் உங்களுக்கு தான் வாக்களிப்போம் என்று மக்கள் கூறுகிறார்கள்.
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை கண்டித்து அறிக்கை விடுத்துள்ளேன். எங்கள் பொருளாளர் டி.ஆர் பாலு தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தோல்வியின் விரக்திக்கு சென்றுவிட்டார். அதனால் திமுகவினர் மீது அவதூறு பரப்புரை செய்து வருகிறார். மக்கள் அதையெல்லாம் கண்டுகொள்ள மாட்டார்கள். தேர்தலில் நாங்கள் தான் வெற்றி பெறுவோம்" என்றார்.
விஜய் குறித்த கேள்வி
திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையே தான் போட்டி என்று தவெக தலைவர் விஜய் சொல்வது பற்றிய கேள்விக்கு ஸ்டாலின், "அதைப்பற்றி எல்லாம் நான் பேச தயாராக இல்லை. நோ கமென்ட்ஸ் என்றார். ஜனநாயகன் படம் சமூகவலைதளங்களில் லீக் ஆனது தொடர்பாக வைக்கப்பட்ட கேள்விக்கும் அவர், அதைப்பற்றி எல்லாம் நான் பேச வேண்டியதில்லை. நோ கமென்ட்ஸ்" என்றார்.
ஜனநாயகன் படம் லீக் ஆனதற்கு உதயநிதி தான் காரணம் என்று ஆதவ் அர்ஜுனா கூறியது பற்றிய கேள்விக்கு, எனக்கு தெரியவில்லை. ஆதவ் அர்ஜுனா பற்றிய செய்திகளை எல்லாம் நான் படிப்பதில்லை என்று பதில் அளித்தார். ஸ்டாலினின் இந்த பேட்டி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு தவெகவினர் எதிர்வினையாற்றி வருகிறார்கள்.
