திருவள்ளுவர் கல்வியியல் டிரஸ்ட், மற்றும் வி பி எஸ் வேத பாடசாலை இணைந்து நடத்திய முப்பெரும் விழா .!

தென்காசி

திருவள்ளுவர் கல்வியியல் டிரஸ்ட், மற்றும் வி பி எஸ் வேத பாடசாலை இணைந்து நடத்திய முப்பெரும் விழா .!

தென்காசியில் திருவள்ளுவர் கல்வியியல் டிரஸ்ட், மற்றும் வி பி எஸ் வேத பாடசாலை இணைந்து நடத்திய முப்பெரும் விழா

தென்காசி ஆக 09

தென்காசி வாய்க்கால் பாலம் இசக்கி மஹால் அருகில் திருநெல்வேலி மெயின் ரோட்டில் அமைந்துள்ள டாக்டர் மாடசாமி ஜோதிடர் காம்பவுண்டில் வைத்து திருவள்ளுவர் கல்வியியல் டிரஸ்ட் மற்றும் வி பி எஸ் வேத பாடசாலை இணைந்து நடத்திய முப்பரி நூல் அணியும் விழா, வேத பாடப் பயிற்சி வகுப்பு, மற்றும் மார்க் சீட் வழங்கும் நிகழ்ச்சி என முப்பெரும் விழா  இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு டி வி கே டிரஸ்ட் தலைவர் முனைவர் மாடசாமி ஜோதிடர் தலைமை வகித்தார். டி வி கே அவைத்தலைவர் சங்கர் ஜோதிடர், கௌரவத் தலைவர் தாமோதரன் நாயனார் ஜோதிடர், மூத்த உறுப்பினர் கோவை பஞ்சாட் சரம்ஜோதிடர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் செல்வகணேஷ் ஜோதிடர் வரவேற்புரை ஆற்றினார்.

பொருளாளர் சங்கர் ஜோதிடர் தொகுப்புரை வழங்கினார்.முப்புரிநூல் அணிவித்து, வேத பாடப் பயிற்சி அளிக்கும் வேத பாடசாலை நிறுவனர் வேத குரு பண்டிட் ஸ்ரீதர் ஜோதிடர்   சிறப்புரை ஆற்றினார். 
சங்க பொருளாளர் கஜேந்திரன் ஜோதிடர், முத்துராஜ், செயலாளர் முருகேசன், பொருளாளர் ஜெய்சங்கர்,
முனைவர் ராஜ பரசுராம ஆழ்வார், நாடி ஜோதிடர் வரதராஜன், நிர்வாக குழு பொதுச் செயலாளர் முருகன், பொருளாளர் வெங்கடேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினனர்.


இந்நிகழ்ச்சியில் ரவிச்சந்திரன் ஜோதிடர், கணேசன் ஜோதிடர், மகாசபரி கணேஷ், சௌந்தரராஜன், சீதாராமன், ரங்கதுரை ஜோதிடர், மாதவன்,ஜெகநாத், ஸ்ரீதர், சரவணன், டாக்டர் ராதா கிருஷ்ணன், ஓசூர் சங்கரன், தேனி ராஜசேகர், திருப்பூர் கணேஷ் குமார், மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் முனைவர் மாடசாமி ஜோதிடர் அனைவருக்கும் நன்றி கூறினார்.

செய்தியாளர்

AGM கணேசன்