இந்த மன்னர் ஒவ்வொரு ஆண்டும் ஒரு கன்னிப்பெண்ணை திருமணம் செய்து கொள்வாராம்! மொத்தம் இத்தனை மனைவிகளா?
இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான நாடுகள் ஜனநாயக ஆட்சி முறையை ஏற்றுக்கொண்டுள்ளன. இந்த நாடுகளில் குடிமக்கள் தங்கள் அரசாங்கங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
இந்த அரசுகள் பொதுமக்களின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டால், ஆட்சியில் இருந்து வெளியேறி விடலாம். இருப்பினும், ஜனநாயகம் நிறுவப்படாத சில நாடுகள் இன்னும் உள்ளன. இன்றும் அங்கு மன்னராட்சி தான் நடைபெறுகிறது. மன்னர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சட்டங்களை உருவாக்கி சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகின்றனர். அப்படி மன்னராட்சி நடைபெறும் இடம் ஈஸ்வதினி ராஜ்ஜியம் என்று அழைக்கப்படும் ஆப்பிரிக்க நாடான சுவாசிலாந்து.
இந்த நாட்டின் மன்னர் மூன்றாம் எம்ஸ்வதி ஒவ்வொரு ஆண்டும் ஒரு கன்னிப் பெண்ணை திருமணம் செய்துகொள்கிறார், இதனால் அவருக்கு அதிக எண்ணிக்கையிலான மனைவிகளும் குழந்தைகளும் இருக்கின்றனர்.. 2018 ஆம் ஆண்டில், ஸ்வாசிலாந்தின் சுதந்திரத்தின் 50 வது ஆண்டு விழாவில், மன்னர் நாட்டின் பெயரை ஈஸ்வதினி இராச்சியம் என்று மாற்றினார். இந்த சிறிய நாடு தென்னாப்பிரிக்கா மற்றும் மொசாம்பிக் அருகே அமைந்துள்ளது.
தனது செயல்கள் காரணமாக ஈஸ்வதினி மன்னர் மூன்றாம் எம்ஸ்வதி அடிக்கடி தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறார்.. ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில், உம்லாங்கா விழா லுட்ஜிட்சினி என்ற அரச கிராமத்தில் நடைபெறும். இந்த திருவிழாவின் போது, 10,000 க்கும் மேற்பட்ட கன்னிப் பெண்கள் மற்றும் இளம் பெண்கள் பங்கேற்று, அரசர் முன் நடனமாடுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்த பெண்களில் ஒருவரை மன்னர் தனது புதிய ராணியாக தேர்வு செய்கிறார். இதைவிட ஆச்சர்யம் என்னவென்றால், இந்த பாரம்பரிய நடனத்தை பெண்கள் நிர்வாணமாக ஆடுவது தான். இந்த பெண்கள் எந்த ஆடையும் இன்றி ராஜா மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் முன்னிலையில் ஆடுகின்றனர்..
ஆனால் இந்த நடைமுறை நாட்டில் பல இளம் பெண்களிடமிருந்து விமர்சனங்களை எதிர்கொண்டது, மேலும் சிலர் நடன நிகழ்ச்சியில் பங்கேற்க மறுத்துவிட்டனர். இந்த மீறலைப் பற்றி மன்னரின் கவனத்திற்கு சென்ற பிறகு, அவர்களின் குடும்பங்களுக்கு அதிக அபராதம் விதிக்கப்பட்டது. நாட்டின் மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் கடுமையான வறுமையுடன் போராடும் நிலையில், மன்னர் ஆடம்பரமான வாழ்க்கை முறையை வாழ்கிறார் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
2015 ஆம் ஆண்டில், இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள மன்னர் மூன்றாம் எம்ஸ்வதி இந்தியா வந்தார். அவர் தனது 15 மனைவிகள், குழந்தைகள் மற்றும் 100 பணியாளர்களுடன் அவர் வந்திருந்தார்.. அவர் தங்குவதற்காக டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் 200 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டன. இந்த சம்பவம் அவரது ஆடம்பரமான வாழ்க்கை முறையை எடுத்துக்காட்டும் விதமாக அமைந்தது. ஈஸ்வதினி மன்னர் மூன்றாம் எம்ஸ்வதிக்கு தற்போது 16 மனைவிகளும் 45 குழந்தைகளும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.