தலித் விடுதலை இயக்க மாநில தலைவர், ஆதிதிராவிட நலத்துறை இயக்குனரிடம் கோரிக்கை மனு.!
தென்காசி
தலித் விடுதலை இயக்க மாநில தலைவர், ஆதிதிராவிட நலத்துறை இயக்குனரிடம் கோரிக்கை மனு
தென்காசி நவ 05
தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் ச.கருப்பையா அமைப்பு சார்பாக.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்தில் வயலிமிட்டா கிராமத்தில் வசிக்கும் பட்டியலினத்தில் சொந்தமாக வீடு இல்லாத 50-குடும்பங்களுக்கு கடந்த 2002-ஆண்டில் இரண்டு ஏக்கர் நிலம் ஆதிதிராவிட நலத்துறையின் மூலமாக விலைக்கு வாங்கப்பட்டு அதற்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப் பட்டுள்ளது..
அந்த இரண்டு ஏக்கர் நிலத்தினை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து கோவிலும் நிலம் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு சுற்றுச்சுவர் எழுப்பட்டுள்ளது குறித்தும்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம், வாணக்கன் காடு, கிராமத்தில் வசிக்கும் சுமார் 60-பட்டியலின மக்கள் கடந்த 100-ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் மயானம் அதே ஊரைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பில் கள்ளர் சாதியைச் சார்ந்த முருகன் என்ற தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளது இந்த சம்பவங்கள் குறித்து ஆதிதிராவிட நலத்துறையின் இயக்குநர் ஆனந்த் சென்னை எழிலகம் இயக்குநர் அலுவலகத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்தார்.
செய்தியாளர்
AGM கணேசன்
