ஆர்.செல்லான் நாயக்கரின் பிறந்த நாளினை முன்னிட்டு அவரின் திருஉருவப் படத்திற்கு புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.!
கிருஷ்ணகிரி

புதுச்சேரி மாநில விடுதலை போராட்ட தியாகியும் முதல் செவாலியர் பட்டம் பெற்றவரும் பிரபல வழக்கறிஞருமான ஆர்.செல்லான் நாயக்கரின் பிறந்த நாளினை முன்னிட்டு அவரின் திருஉருவப் படத்திற்கு புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
கிருஷ்ணகிரி, உத்தனப்பள்ளி, அரூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மூன்று முறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அமரர்
பி.கே.பி.எம். முனுசாமி கவுண்டரின் மாமனாரும், புதுச்சேரி மாநிலத்தின் விடுதலைப்போராட்ட தியாகியும், முதல் செவாலியர் பட்டம் பெற்றவருமான ஆர். செல்லான் நாயக்கர் பிறந்த நாளினை புதுச்சேரி அரசு விழாவாக கொண்டாடியது,
இதற்கான விழா புதுச்சேரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள மேரி கட்டிட கூட்டரங்கில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த முதல் செவாலியர் விருது பெற்றவரும், புதுச்சேரி மாநில விடுதலைப் போராட்ட தியாகியும், பிரபல வழக்கறிஞருமான அமரர் ஆர். செல்லான் நாயக்கர் அவர்களின் திருஉருவப் படத்திற்கு புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி அவர்கள் கலந்துகொண்டு மலர்மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்,
இதனைத் தொடர்ந்து சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜா வேலு, அமைச்சர் லட்சுமி நாரயணன், சட்டமன்ற உறுப்பினர்களான நேரு, லட்சுமிகாந்தன், சாய், சரவணகுமார் ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
மேலும் இந்த விழாவின் போது பி.கே.பி.எம்.குடும்பத்தினை சார்ந்த காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினரும், பிரபல வழக்கறிஞருமான ராஜேந்திர வர்மா, போஜா ராஜா வர்மா, திருமதி தேன்மொழிவர்மா, திருமதி உமாராணி அனந்தராமன் குடும்பத்தினர் உள்ளிட்ட ஏராளமானவர்கள் இந்த விழாவில் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ