கிராம சபைக் கூட்டத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நூறு நாள் வேலையை இன்னும் அதிகப்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே உள்ள கட்டிகானப்பள்ளியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நூறு நாள் வேலையை இன்னும் அதிகப்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டது,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 333 ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் மாவட்ட ஆட்சி தலைவர் தினேஷ்குமார் அவர்களின் உத்தரவின்படி அந்தந்த ஊராட்சி செயலாளர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதேபோல் கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், கட்டிகானப்பள்ளி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டம் கட்டிகானப்பள்ளி ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த கிராம சபைக் கூட்டத்திற்கு முன்னாள் ஒன்றியகுழு உறுப்பினர்கள், வார்டு உறுப்பினர்கள், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சியை சார்ந்த ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பணித்தள பொறுப்பாளர்கள், தூய்மை பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள், காவல்துறை அலுவலர்கள், கிராம செவிலியர்கள் கலந்து கொண்டனர்
மேலும் இந்த கிராம சபைக் கூட்டத்தினை கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் உமாசங்கர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜீ ஆகியோர் கலந்துகொண்டு துவக்கி வைத்ததோடு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர். மேலும் இந்த கூட்டத்தின் போது ஊராட்சி செயலாளர் ஜெயகுமார் கட்டிகானப்பள்ளியின் வரவு, செலவு திட்டங்கள் குறித்து பொது மக்களிடம் எடுத்துரைத்தார்.
மேலும் கலைஞரின் கனவு இல்லத்தின் கீழ் பயனாளிக்கு வீடு வழங்கியதற்கு தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்ளப்பட்டது. மேலும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நூறு நாள் வேலையை இன்னும் அதிகப்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டது,
மேலும் கட்டிகானப்பள்ளி ஊராட்சியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி சிறப்பாக சேவை புரிந்த தூய்மைக் காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கிராம சபை கூட்டத்தின் வாயிலாக பாராட்டும் தெரிவித்துக் கொள்ளப்பட்டது.