மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு.!
சென்னை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் மற்றும் மத்திய குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய சட்ட முன் வடிவுகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருந்தது சட்டவிரோதமானது என்று தமிழ்நாடு அரசுக்கு சாதமாக தீர்ப்பளித்ததையொட்டி வாழ்த்து தெரிவித்தது.
மேலும் மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24ஆவது மாநாட்டில் கலந்து கொண்டதற்காகவும் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi ( MR )