மாணவி வன்கொடுமை. சென்னை கமிஷனர் அருண் மீது நடவடிக்கை எடுங்க. தமிழக அரசுக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவு.!

சென்னை

மாணவி வன்கொடுமை. சென்னை கமிஷனர் அருண் மீது நடவடிக்கை எடுங்க. தமிழக அரசுக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவு.!
Arun IPS

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 21ஆம் தேதி இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதன்பிறகு மாணவியின் விவரங்கள் அடங்கிய எப்ஐஆர் இணையதளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது பாதிக்கப்பட்ட மாணவிக்கு 25 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் பிறகு இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை முதன்மை செயலாளர், பல்கலைக்கழகத் துணைவேந்தர், பதிவாளர், தமிழக டிஜிபி மற்றும் சென்னை கமிஷனர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 3 ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகு மாணவியின் சுயவிவரங்கள் அடங்கிய எப்ஐஆர பாதுகாக்கப்படவில்லை என்று அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் தமிழக அரசின் அனுமதி இல்லாமல் செய்தியாளர்களை சந்தித்த சென்னை கமிஷனர் அருண் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.

மேலும் ஒரு பெண் என்பதால் ஆண் அவரை தொட அனுமதி கிடையாது எனவும் காதல் மற்றும் இரவில் தனியாக செல்வது எல்லாம் பெண்ணின் தனிப்பட்ட விருப்பம் எனவும் எந்த ஒரு விஷயத்துக்கும் பெண்ணை குறை சொல்வது நியாயம் கிடையாது எனவும் கூறிய நீதிபதிகள் அந்த பெண்ணின் சுய விவரங்கள் வெளிவந்தது தவறு எனவும் அந்தப் பெண் துணிச்சலாக புகார் கொடுத்தது பாராட்டுத்தக்கது எனவும் கூறினார். அதன் பிறகு கல்லூரியில் படிப்பு முடியும் வரை அந்த பெண்ணிடம் கட்டணம் வசூலிக்க கூடாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.