பாலியல் புகாரில் சென்னை இணை ஆணையர் பணியிடை நீக்கம்.!
சென்னை

தமிழகத்தில் சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையராக பணிபுரிந்து வந்தவர் மகேஷ்குமார் ஐபிஎஸ்.
இந்நிலையில், பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையர் மகேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மகேஷ்குமார் மீதான புகார் குறித்து டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் தீவிர விசாரணை நடத்த இருப்பதாக விசாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.