தென்காசி மாவட்டத்தில் செப்.26 முதல் "அவசர கால ஆம்புலன்ஸ்" ஹரி பிரியாணி துவக்கம்!.!
தென்காசி

தென்காசி மாவட்டத்தில் செப்.26 முதல்
"அவசர கால ஆம்புலன்ஸ்" ஹரி பிரியாணி துவக்கம்!
தென்காசி, செப் - 23
பொதுமக்களை ஆபத்து மற்றும் அவசர காலங்களில் காப்பாற்ற ஆம்புலன்ஸ் சேவையை வரும் 26.09.2025 முதல் "சாம்பவர்வடகரை ஹரி பிரியாணி"துவக்க உள்ளது.
ஆம்புலன்ஸ் சேவை குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு குற்றாலத்தில் நடந்தது. இதில் ஹரி பிரியாணி அதிபர் சு.ஹரிஹர செல்வன், உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் சேவை குறித்து கூறியதாவது.
ஹரி பிரியாணி தற்போது பொது மக்களின் பேராதரவினால் தமிழகம் மற்றும் கேரளாவில் 12 இடங்களில் செயல் படுகிறது. இந்த சமூகத்தில் நாங்கள் சம்பாதிக்கின்ற லாபத்தை மக்களுக்கு திருப்பிக் கொடுக்கின்ற திட்டம் தான் "அவசர கால ஆம்புலன்ஸ் திட்டம்".ஒரே நேரத்தில் மூன்று ஆம்புலன்ஸ் வாகனங்களை இயக்குகின்றோம்.
தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை - பாவூர்சத்திரம், ஆலங்குளம் ஆகிய மூன்று இடங்களில் ஹரி பிரியாணி கடைகளில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் அழைப்பிற்கு தயாராக நிற்க வைக்கப் பட்டிருக்கும். 30 லட்சம் செலவில் இந்த ஆம்புலன்ஸ் திட்டம் பொதுமக்கள் வசதிக்காக செப்டம்பர் 26, வெள்ளிக் கிழமை காலை 10 மணிக்கு சாம்பவர் வடகரை ராமசாமி திருக்கோவில் வளாகத்தில் வைத்து துவக்கப்படுகின்றது.
தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் சர்வ அரசியல் கட்சித் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்,
சமூகத்தில் அடையாளம் காணப்பட்ட
பெரியோர்கள், மருத்துவர்கள், சேவகர்கள், ஒத்த சிந்தனையாளர்கள் ஆம்புலன்ஸ் துவக்க விழாவில் கலந்து கொள்கின்றனர். தள்ளுவண்டி கடையில் ஆரம்பித்த பிரியாணி பிசினஸ் இன்று இரண்டு மாநிலங்களில் ஹரி பிரியாணி ஹோட்டல்களாக
உருமாறியுள்ளது.
"தனது மனைவியின் தலை பிரசவத்தில் தனக்கு தேவையற்ற அலைச்சல், பண செலவு, மன கஷ்டம், கோபம். வருத்தம் ஆகியவைகளின் வெளிப்பாடு இந்த "ஆம்புலன்ஸ் சேவை" சாலையில் பயணிக்கும் போது தான் பார்த்த விபத்துக்கள், மரண ஓலம்,வாகனம் வர தாமதமாகி அப்பாவி
மக்கள் உயிரிழந்த காட்சிகள், உடலுறுப்புக்கள் சிதைந்து ரத்தம் வெளியேறி காப்பாற்ற முடியாமல் போன அருமை உயிர்கள் எல்லாமே கண்முன் நிழலாடித் தான் இந்த ஆம்புலன்ஸ் சேவையை மூன்று முக்கிய இடங்களில் துவக்குகிறேன்" என அவர் நிருபர்கள் மத்தியில் கூறினார்.
தனது தாய்-தந்தை முப்புடாதி சுப்பிரமணியன் ஆசிகள், மனைவி சுதாவின் ஆதரவு தன்னை செயல்பட வைக்கும் உந்து சக்தியாக திகழ்கிறது என தெரிவித்தார்.
இந்த ஆம்புலன்ஸ் சேவையில் காவல்துறை, தீயணைக்கும் படை, உள்ளூர் சேவை அமைப்புகள் மருத்துவத் துறை துணை நிற்க வேண்டும். இறந்தவர்களின் சடலங்களை இதில் கொண்டு செல்ல முடியாது எனவும் கூறினார். இனி நாமறிய நமக்குத் தெரிய ஒரு உயிர் கூட விபத்துகளில், பிரசவங்களில், மாரடைப்புகளில், வேறு நோய்களில், ரத்த இழப்புகளில் நஷ்டப் படக்கூடாது என்றும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு நாடார் உறவின் முறை கூட்டமைப்பின் மாநில தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார், பொதுச்செயலாளர் கணேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
ஆம்புலன்ஸ் சேவைக்கு
907 108 108 1 (சாம்பவர்வடகரை]
907 108 108 2 (ஆலங்குளம்)
907 108 108 3 (பாவூர்சத்திரம்) தொடர்பு கொள்ள மொபைல் எண்களையும் அவர்
அறிவித்துள்ளார்.
செய்தியாளர்
AGM கணேசன்