திருக்குறளில் திருப்பணிகள் எனும் பொருளில் பயிலரங்கம்.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், கெரிகேப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று (04-11-25) செவ்வாய் கிழமை திருக்குறளில் திருப்பணிகள் எனும் பொருளில் பயிலரங்கம் நடைபெற்றது.
இக் கருத்தரங்கிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பெ.செந்தில் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. பள்ளி முதுகலை தமிழாசிரியர் சி.மாது அவர்கள் திருக்குறளை திறன்மிக்க வகையில் பயிற்றுவித்தார்.

பள்ளி மாணவர்கள் சிறப்பாக உற்று நோக்கி மகிழ்ந்தனர். கற்றலில் சிறந்த குழந்தைக்கு திருக்குறள் புத்தகம் பரிசளிக்கபட்டது.
செய்தியாளர்
மாருதி மனோ
