திமுக, தவெக ஆகிய கட்சிகளில் இருந்து விலகிய 100க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.!

அதிமுக

திமுக, தவெக ஆகிய கட்சிகளில் இருந்து விலகிய 100க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.!

திமுக, தவெக ஆகிய கட்சிகளில் இருந்து விலகிய 100க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாகலூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் திமுக தவெக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய 100க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதிமுக ஒன்றிய செயலாளர் ரவிக்குமார் தலைமையில் விஜயகுமார் ஏற்பாட்டில் திமுக, தவெகா  ஆகிய கட்சிகளில் இருந்து விலகிய 100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

இந்த நிகழ்சியில் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீஷ், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சென்ன கிருஷ்ணன்,  ஓசூர் மாமன்ற உறுப்பினர் மல்லிகை தேவராஜ், சார்பணி ஒன்றிய செயலாளர் முனி ரெட்டி, தகவல் தொழில்நுட்பு ஒன்றிய தலைவர் கிரண்  உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, அதிமுக ஆட்சிக்காலத்தில் ஓசூர் பகுதியில் பல்வேறு பகுதிகளில் சாலை வசதி, மின்சார வசதி, குடிநீர் உள்ளிட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. வட்டார வளர்ச்சி அலுவலக கட்டிடம், மாநகராட்சி கட்டிடம், ஆர்.டி.ஓ அலுவலக கட்டிடம் ஆகியவை கட்டி கொடுக்கப்பட்டு வளர்ச்சி பாதையில் சென்றது. வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்ற பின்னர் ஓசூர் மக்களுக்கு தேவையான அனைத்து வளர்ச்சி திட்டங்களும் செய்து கொடுக்கப்படும் என தெரிவித்தார்.

செய்தியாளர்

மாருதி மனோ