ஒசூர் அருகே மதுபான கடைக்கு அருகாமையில் வாலிபர் அடித்துக்கொலை, உடலை கைப்பற்றி போலிசார் விசாரணை .!

கிருஷ்ணகிரி

ஒசூர் அருகே மதுபான கடைக்கு அருகாமையில் வாலிபர் அடித்துக்கொலை, உடலை கைப்பற்றி போலிசார் விசாரணை .!

ஒசூர் அருகே மதுபான கடைக்கு அருகாமையில் வாலிபர் அடித்துக்கொலை, உடலை கைப்பற்றி போலிசார் விசாரணை.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அடுத்த சூளகிரி அருகே உள்ள கங்கசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் அமரேசன்(30)

இவர் தனியார் தொழிற்சாலையில் வேலைப்பார்த்து வந்தநிலையில், இவரது ஊருக்கு அருகே உள்ள காருபலா என்னும் கிராமத்தில் உள்ள மதுபான கடைக்கு சென்றுள்ளார்.

இந்தநிலையில் மதுபான கடைக்கு பின்புறம் அமரேசன் என்பவரை மர்மநபர்கள் தென்னை மட்டை, உருட்டு கட்டைகளால் அடித்துக்கொலை செய்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து சூளகிரி போலிசார் விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர்

மாருதி மனோ