கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் .!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மற்றும் அரசின் முன்னோடித் திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் குறித்து அரசு செயலாளர், வணிகவரி மற்றும் பதிவுத்துறை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் இ.ஆ.ப.,மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார், இ.ஆ.ப., ஆகியோர் முன்னிலையில், அனைத்துதுறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
உடன், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திருமதி.கவிதா, மாவட்ட வன அலுவலர் பகான் ஜெகதீஷ் சுதாகர், இ.வ.ப., ஒசூர் மாநகராட்சி ஆணையாளர் முகம்மது ஷபீர் ஆலம், இ.ஆ.ப., ஒசூர் சார் ஆட்சியர் திருமதி.ஆக்ரிதி சேத்தி, இ.ஆ.ப., திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) பெரியசாமி, மாவட்ட ஆட்சியாளரின் நேர் முக உதவியாளர் (பொது) கோபு, துணை ஆட்சியர் (பயிற்சி) செல்வி.க்ரிதி காம்னா, இ.ஆ.ப. உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
