சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக மகளிர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் 2 ஆம் கட்டம் .!

கிருஷ்ணகிரி

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக மகளிர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் 2 ஆம் கட்டம் .!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் ஆனந்த் கிராண்ட் பேலஸில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக மகளிர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் 2 ஆம் கட்டத்தின் கீழ் மகளிர்க்கு உரிமைத்தொகைக்கான  பற்று அட்டைகள் வழங்கியும்,  தேன்கனிக்கோட்டை மற்றும்  ஓசூர் பகுதிகளில் 957 பயனாளிகளுக்கு இலவச வீட்டமனை பட்டா வழங்கல்,

வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம், பேட்டப்பனூர், சூளகிரி ஊராட்சி ஒன்றியம் தொட்டேகவுன்பள்ளி, கல்லுகுறுக்கி, பருவீதி, அஞ்செட்டி வட்டத்தில் ஏணிபண்டை ஆகிய 4 இடங்களில்  பகுதிநேர நியாய விலைக்கடைகள் திறந்து வைத்த  உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, தமிழ்நாட்டிலே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தான் 85,711 பயனாளிகளுக்கு இலவசமாக பட்டாக்கள் வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது என  பெருமிதம்.

உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., சட்டமன்ற உறுப்பினர்கள் ஒய்.பிரகாஷ் (ஒசூர்), டி.ராமச்சந்திரன் (தளி), ஒசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, ஒசூர் மாநகராட்சி ஆணையாளர் முகம்மது ஷபீர் ஆலம், இ.ஆ.ப., ஒசூர் சார் ஆட்சியர் திருமதி.ஆக்ரிதி சேத்தி, இ.ஆ.ப., உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ