பெருங்களத்தூரில் சட்டவிரோதமாக ஒரு நம்பர் கேரளா லாட்டரி விற்பனை அமோகம்
சென்னை
பெருங்களத்தூரில் சட்டவிரோதமாக ஒரு நம்பர் கேரளா லாட்டரி விற்பனை அமோகம்,
கண்டுகொள்ளதாக காவல்துறை மாதா மாதம் சன்மானத்தால் நடவடிக்கை எடுக்க தயக்கம்.
கவனிப்பாரா தாம்பரம் காவல் ஆணையர்.
சென்னை பெருங்களத்தூரில் ஆட்டோவில் வைத்து சட்ட விரோதமாக கேரளா ஒரு நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபடும் சமூக விரோதிகள், இவர்களை கைது செய்யாமல் காவல்துறை தக்க சன்மானம் பெற்றுக் கொண்டு கண்டும் காணாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.
தமிழகத்தில் ஏழை எளிய கூலித் தொழிலில் ஈடுபடும் அப்பாவி மக்கள் லாட்டரியால் தங்கள் குடும்பத்தை கவனிக்காமல் லாட்டரியை வாங்கி நஷ்டமடைந்து தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவதால் லாட்டரியை தடை செய்தது தமிழக அரசு,
ஆனால் காவல்துறை அதிகாரிகளோ இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சமூகவிரோதிகளோடு கூட்டுச் சேர்ந்து கொண்டு லாட்டரி விற்பனையில் பங்குதாரர் போல் செயல்படுகின்றனர்.
தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லைப்பகுதியில் தாம்பரம், பீர்க்கன்காரணை, கூடுவாஞ்சேரி, சங்கர் நகர், உள்ளிட்ட காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் தங்கு தடையின்றி சட்டவிரோத லாட்டரி விற்கபடுகிறது.
ஆணையர் அவர்கள் இதனை முற்றிலும் தடுத்து நிறுத்தி ஏழை எளியோரின் குடும்பங்களை காக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.
செய்தியாளர்
S S K