தே மு தி க தலைவர் மறைந்த விஜய்காந்த் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி

சென்னை

தே மு தி க தலைவர் மறைந்த விஜய்காந்த் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி

வேளச்சேரியில் தேமுதிக தலைவர் விஜய்காந்த் முதலமாண்டு நினைவு தினம்.! தேமுதிகவினர் மலர் தூவி அஞ்சலி.!

அதிமுக மாவட்ட செயலாளர் எம்.கே.அசோக் விஜய்காந்த் திருவுருவ படத்தை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.

சென்னை வேளச்சேரி நேரு நகர், நேதாஜி சாலையில், மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த்தின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தேமுதிக வேளச்சேரி மேற்கு பகுதி கழக செயலாளர் ஸ்டீல்.டி.கர்ணா தலைமையில்,  விஜய்காந்த் திருவுருவ படத்தை வேளச்சேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக  தென்சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் எம்.கே.அசோக் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செய்து, அஞ்சலி செலுத்தினார்.

நிகழ்வில் அதிமுக 175 வது வட்ட கழக செயலாளர் ஸ்ரீதர்(எ) குட்டி மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொழிலதிபர் குட்டிமணி ஆகியோர் கலந்து கொண்டனர், 

தேமுதிக 175 வது வார்டு வட்ட செயலாளர் ஜெ.ராமு, 176 வது வார்டு வட்ட செயலாளர் பாஸ்கர், 177 வது வட்ட செயலாளர்கள் ரகுபதி,  ஸ்டாலின், கார்த்தி, கண்ணன் ஜெயபிரகாஷ், மாவட்ட நிர்வாகி பி.எஸ்.கோபால், மகளிர் அணி மாவட்ட நிர்வாகி கலா, தனலட்சுமி, ஜெயபாண்டி, மற்றும் தேமுதிக நிர்வாகிகள் லட்சுமணன், அகல்யமித்ரன், கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கேப்டனுக்கு அஞ்சலி செலுத்தினர்.

S S K