சென்னையில் வாகன திருட்டில் ஈடுபட்ட நபர்கள் கைது.!

சென்னை

சென்னையில் வாகன திருட்டில் ஈடுபட்ட நபர்கள் கைது.!

சென்னை-நூதன முறையில் வாகனத் திருட்டில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது-

மேலும் அவர்களிடம் இருந்த ரூபாய் இருபது லட்சம மதிப்புள்ள இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்.!

சென்னை- உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறும் நூதன திருட்டை ஒழிக்க  தொடர் வாகனச் சோதனையில் செம்மஞ்சேரி குற்றப்பிரிவு டி.16 காவல்நிலைய அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர் .

அப்போது அவ்வழியே  சேலையூர் பகுதியில் சந்தேகத்தின் அடிப்படையில் வந்த இருவர்களை மடக்கி பிடித்து ஆய்வாளர் சக்திவேல் தலைமையில் உடன் பணிபுரியும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளும் போது இருவரும் ஓட்டி வந்த வாகனங்கள் திருடப்பட்டது உறுதி படுத்திய பின் அவர்களை விசாரணை மேற்கொண்டதில் வெங்கடேசன் வயது (23) , அருண்குமார் வயது (22) எனவும் தெரியவந்தது.

இதனையடுத்து தீபக் வயது (21), சதீஷ்குமார்  (21) இரு கூட்டாளிகள் இருப்பதாக தெரியவந்தது.

அந்த நான்கு வாலிபர்களை  மடக்கி பிடித்து கைது செய்தும், அவர்களிடம் இருந்த ரூபாய் 20 லட்சம் மதிக்கத்தக்க 18 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த சோதனையில் உடன் பயிற்சி காவல் ஆய்வாளர், துணை காவல் ஆய்வாளர், தலைமை காவல் அலுவலர், மற்றும் காவலர்கள் இருந்தனர்.மேலும் காவல்துறைக்கு சவாலாக இருந்த நூதன திருடர்களை கையும் கலவுமாக பிடித்த செம்மஞ்சேரி குற்றப்பிரிவு போலீசாரை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டினர்.