எஸ்.டி.கூரியர் நிறுவனத்தின் இப்தார் நிகழ்ச்சி.!

சென்னை

எஸ்.டி.கூரியர் நிறுவனத்தின் இப்தார் நிகழ்ச்சி.!

S T கூரியர் குழுமத்தின் இஃப்தார் நிகழ்ச்சி.! மமக தமுமுக நிர்வாகிகள் பங்கேற்பு!!

சென்னையில் S.T கூரியர் குழுமத்தின் சார்பில் ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி அதன் தலைவர் S.T.அன்சாரி தலைமையில் ராயபுரம் ரம்ஜான் மஹாலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லா MLA கலந்து கொண்டு உரையாற்றினார்.

பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது MLA,தலைமை நிர்வாக குழு உறுப்பினர் குணங்குடி R.M.அனீபா,தமுமுக மாநிலச் செயலாளர் சிவகாசி முஸ்தபா,தலைமை பிரதிநிதி தைமியா , வட சென்னை கிழக்கு மாவட்டத்தலைவர் இராயபுரம் அலி,மற்றும் மாவட்ட ,இராயபுரம் பகுதி நிர்வாகிகள் பங்கேற்றார்கள்.

இதில் சமுதாய மற்றும் அரசியல் கட்சிகளின்‌ தலைவர்கள், ஜமாத் தார்கள்‌, சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.