முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சி.வி.சண்முகம் மீது விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவு

முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சி.வி.சண்முகம் மீது விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவு

சென்னை: முதல்வர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கீழமை நீதிமன்றம் மீண்டும் விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளது.

விழுப்புரம் கோலியனூர் பொதுக்கூட்டத்தில் அவதூறாக பேசிய வழக்கில் மீண்டும் விசாரணை நடத்த ஐ கோர்ட் உத்தரவு அளித்துள்ளது.

முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சி.வி.சண்முகம் மீதான 2 வழக்குகளை ஐகோர்ட் ரத்து செய்தது. முதல்வர் பற்றி 2023-ல் அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட 3 வழக்குளை ரத்து செய்யக்கோரி சி.வி.சண்முகம் வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கதாகும்.