குஜராத்தில் நடந்த திடீர் திகில் சம்பவம்

குஜராத்தில் நடந்த திடீர் திகில் சம்பவம்

குஜராத்தில் நடந்த திடீர் திகில் சம்பவம்

குஜராத் மாநிலம் நரோதா பகுதியில் தகனம் செய்யப்பட்ட நபர், மறுதினம் வீட்டில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வந்ததால் பதறியடித்த குடும்பத்தினர்


43 வயதான ப்ரிஜேஷ் சுதர் காணாமல் போனதால் குடும்பத்தினரால் போலீசில் புகாரளிக்கப்பட்டது.

2 வாரத்திற்குப் பிறகு ஆற்றில் ஒரு சடலம் மிதக்க, ப்ரிஜேஷின் உடல் அமைப்பைப் போல இருந்ததால் அவரின் சடலம் எனக் கருதி இறுதிச் சடங்கு செய்த குடும்பத்தினர் தகனமும் செய்து முடித்தனர்.

மறுநாள் வீட்டில் இறந்தவருக்கான பூஜை நடைபெற்றது.

அப்போது திடீரென காணாமல் போன ப்ரிஜேஷ் வீட்டுக்கு வந்துள்ளார். இதனை கண்ட குடும்பத்தினர் பயந்து போயினர்.

பின்னர் மன அழுத்தத்தில் அவர் வீட்டை விட்டு வெளியேறியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.