டெல்லி முதல்வர் அதிஷிக்கே இந்த நிலையா? சொந்த தொகுதியிலேயே பின்னடைவு.!

புது டில்லி

டெல்லி முதல்வர் அதிஷிக்கே இந்த நிலையா? சொந்த தொகுதியிலேயே பின்னடைவு.!

டெல்லி: டெல்லி கல்கஜி சட்டசபை தொகுதியில் முதல்வர் அதிஷி மர்லினா பின்னடைவை சந்தித்து உள்ளார். தொடக்க கட்ட வாக்கு எண்ணிக்கையில் முதல்வர் அதிஷி பின்னடைவை பெற்றுள்ளார்.

பாஜக சார்பாக ரமேஷ் பிதுரி இங்கே முன்னிலை வகிக்கிறார்.

கல்காஜி தெற்கு டெல்லி மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.பிஜ்வாசன், சங்கம் விஹார், அம்பேத்கர் நகர், சத்தர்பூர், தியோலி, துக்ளகாபாத், பாலம், பதர்பூர் மற்றும் மெஹ்ராலி ஆகிய ஒன்பது தொகுதிகளை கொண்ட தெற்கு டெல்லி மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக கல்காஜி உள்ளது. இங்கே மொத்தமாக 1,46,750 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த தொகுதி காங்கிரசின் கோட்டையாக இருந்து அதன் பின் ஆம் ஆத்மிக்கு சாதகமான தொகுதியாக மாறியது.

1993 பூர்ணிமா சேதி இங்கே பாரதிய ஜனதா கட்சி சார்பாக வென்றார்.

1998 சுபாஷ் சோப்ரா இந்திய தேசிய காங்கிரஸ் சார்பாக வென்றார்.

2003 சுபாஷ் சோப்ரா இந்திய தேசிய காங்கிரஸ் சார்பாக வென்றார்.

2008 சுபாஷ் சோப்ரா இந்திய தேசிய காங்கிரஸ் சார்பாக வென்றார்.

2013 ஹர்மீத் சிங் கல்கா சிரோமணி அகாலி தளம் சார்பாக வென்றார்.

2015 அவதார் சிங் ஆம் ஆத்மி கட்சி சார்பாக வென்றார்.

2020ல் முதல்வர் அதிஷி ஆம் ஆத்மி கட்சி சார்பாக வென்றார்.

பின்னடைவு:

டெல்லி கல்கஜி சட்டசபை தொகுதியில் முதல்வர் அதிஷி மர்லினா பின்னடைவை சந்தித்து உள்ளார். தொடக்க கட்ட வாக்கு எண்ணிக்கையில் முதல்வர் அதிஷி பின்னடைவை பெற்றுள்ளார்.

ஆம் ஆத்மி சார்பாக அதிஷி மர்லினா போட்டியிடுகிறார்.

பாஜக சார்பாக ரமேஷ் பிதுரி போட்டியிடுகிறார்

காங்கிரஸ் சார்பாக அல்கா லம்பா போட்டியிடுகிறார்

கடந்த 2020 சட்டசபை தேர்தலில் 55,897 வாக்குகளை பெற்று 9 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அதிஷி இங்கே வென்றார். இந்த நிலையில் தற்போது டெல்லி கல்கஜி சட்டசபை தொகுதியில் முதல்வர் அதிஷி மர்லினா பின்னடைவை சந்தித்து உள்ளார். தொடக்க கட்ட வாக்கு எண்ணிக்கையில் முதல்வர் அதிஷி பின்னடைவை பெற்றுள்ளார். பாஜக சார்பாக ரமேஷ் பிதுரி இங்கே முன்னிலை வகிக்கிறார்.

இதுவரை அங்கே எண்ணப்பட்ட வாக்குகளில் பாஜக 39 இடங்களிலும், ஆம் ஆத்மி 26 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

டெல்லியில் மும்முனை போட்டி நிலவி வருகிறது. ஆம் ஆத்மி - பாஜக - பாஜக இடையே போட்டி நிலவுகிறது. அதேபோல் சிபிஎம், சிபிஐ கட்சிகளும் தனியாக கூட்டணி அமைத்துள்ளனர். இந்த தேர்தலில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி தனித்து 70 இடங்களிலும் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சியும் தனித்து 70 இடங்களிலும் போட்டியிடுகிறது. பாஜக 68 இடங்களில் போட்டியிடுகிறது. பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் 1 இடத்திலும், லோக் ஜனசக்தி கட்சி 1 இடத்திலும் போட்டியிடுகிறது.

இந்த தேர்தலில் மகிளா சம்மன் யோஜனா என்ற பெயரில் ரூ.2100 மாதம் பெண்களுக்கு வழங்கப்படும் என்று ஆம் ஆத்மி வாக்குறுதி அளித்தது. பாஜக சார்பாக மகிளா சம்ரிதி யோஜனா என்ற பெயரில் பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. காங்கிரஸ் சார்பாக பெண்களுக்கு மாதம் ₹2500 நிதியுதவி வழங்கும் திட்டமான பியாரி திதி யோஜ்னா தொடங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.