இனி 10,000 த்திற்கும் மேல் அனுப்பினால் கட்டணம். !
இந்தியா

பிப்ரவரி 2025 ல் பயன்படுத்தப்படும் யுபிஐ (UPI) சேவை முதல் பிரபலமான வங்கியின் பேங்க் சேவிங்ஸ் அக்கவுண்ட் (Bank Savings Account) வரையிலாக, பிஃன்டெக் துறையில் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வந்தன மற்றும் சில நாட்களில் அமலுக்கு வரவுள்ளன.
முதல் மற்றும் முக்கிய மாற்றத்தை பொறுத்தவரை யுபிஐ பரிவர்த்தனை ஐடிகளை (UPI transaction ID) உருவாக்கும் செயல்முறையை தரப்படுத்துவதற்காக, என்பிசிஐ (NPCI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகமானது, யுபிஐ பரிவர்த்தனை ஐடிகளில் "எண்ணெழுத்து" எழுத்துக்களை (Alphanumeric characters) மட்டுமே பயன்படுத்தும் படியும், சிறப்பு எழுத்துக்களை (Special characters) பயன்படுத்துவதை தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளது.
பிப்ரவரி 1, 2025 முதல், எந்த யுபிஐ பேமெண்ட் ஆப்களாலும் சிறப்பு எழுத்துகளை பயன்படுத்தி பரிவர்த்தனை ஐடிகளை உருவாக்க முடியாது. ஒருவேளை பரிவர்த்தனை ஐடியில் சிறப்பு எழுத்துகள் உள்ள யுபிஐ ஆப்பை நீங்கள் பயன்படுத்தினால், அந்த ஆப் வழியிலான பரிவர்த்தனைகள் நிராகரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. யுபிஐ பரிவர்த்தனை ஐடி ஆனது உங்களுடைய யுபிஐ ஐடி-யில் இருந்து வேறுபட்டது என்பதை நினைவில் கொள்ளவும் இரண்டையும் ஒன்றென எண்ணி குழப்பிக்கொள்ள வேண்டாம்.
அடுத்ததாக கோடக் மஹிந்திரா வங்கி 811 சேமிப்பு கணக்குகளில் முக்கிய மாற்றம் அமலுக்கு வந்துள்ளது. இந்த வங்கியின் கிளைகள் மற்றும் பண வைப்பு இயந்திரங்களின் வழியிலான ரொக்க பரிவர்த்தனை கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளது.ஒரு மாதத்திற்கான முதல் இலவச பரிவர்த்தனைக்கு பிறகு அல்லது மாதம் ரூ.10,000 டெபாசிட்க்கு பின்னர் அனுப்பப்படும் ரூ.1,000 க்கு ரூ.5 (அதிகபட்சம் ரூ.50) கட்டணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கூரியர் மூலம் பின் ரீஜெனரேஷன், மூத்த குடிமக்களுக்கு கேஷ் / இன்ஸ்ட்ரூமென்ட் பிக்அப் மற்றும் பேலன்ஸ் ஸ்டேட்மெண்ட்ஸ் போன்ற சில கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. ஏடிஎம் டிக்ளைன் கட்டணம் ரூ.25 ஆகவே உள்ளது, ஆனால் இப்போது இது கோட்டாக் அல்லாத ஏடிஎம்களுக்கு மட்டுமே பொருந்தும்.
மேலும் ஸ்டேண்டிங் இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் (SI) ஃபெயிலருக்கான கட்டணம் ரூ.200 இல் இருந்து ரூ.100 ஆக குறைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, இலவச ஏடிஎம் பரிவர்த்தனை வரம்புகள் ஆனது, கார்டு வகையின் அடிப்படையில் திருத்தப்பட்டுள்ளன. குறிப்பிட்ட வரம்புகளுக்கு அப்பால் கட்டணம் விதிக்கப்படும். மஹிந்திரா வங்கி 811 சேவிங்ஸ் அக்கவுண்ட் வாடிக்கையாளர்கள் மேற்கண்ட மாற்றங்களை மனதில்கொண்டு பணபரிவர்தனைகளை செய்யவும்.
இதேபோல ஐடிஎப்சி பர்ஸ்ட் (IDFC First) கிரெடிட் கார்டு பயனர்களுக்கும் சில முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற பிப்ரவரி 20, 2025 முதல் இவ்வங்கியின் கிரெடிட் கார்டுகளுக்கு பல புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. IDFC FIRST Millennia, FIRST Wealth மற்றும் FIRST SWYP கிரெடிட் கார்டுகளுக்கான ஸ்டேட்மென்ட் தேதி திருத்தப்பட்டுள்ளது.
மேலும் CRED, PayTM மற்றும் MobiKwik போன்ற மூன்றாம் தரப்பு இயங்குதளங்கள் மூலம் செய்யப்படும் கல்வி கட்டண செலுத்துதலுக்கு 1% கட்டணம் (குறைந்தபட்சம் ரூ.249) விதிக்கப்படும், ஆனால் இந்த கட்டணம் பள்ளி அல்லது கல்லூரி இணையதளங்கள் அல்லது பிஓஎஸ் இயந்திரங்கள் மூலம் நேரடியாக பணம் செலுத்துவதற்கு பொருந்தாது.
கடைசியாக 2025 பிப்ரவரி 7ஆம் தேதி ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை மறுஆய்வு அறிவிக்கப்படும். நிதியாண்டு 2024 - 25 அட்டவணையின் ஒரு பகுதியாக, அடுத்த ஆர்பிஐ நாணய கொள்கைக் குழு கூட்டம் பிப்ரவரி 5 முதல் 7 ஆம் தேதி வரை நடக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ரெப்போ ரேட் குறைக்கப்படும் என்று பல நிபுணர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. ரெப்போ விகிதத்தில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், வங்கிகள் அந்த மாற்றங்களை பின்பற்றி, செயல்படுத்த வேண்டி இருக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.