பிள்ளையார் நத்தம்-அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ முத்தாலம்மன் ஸ்ரீ பகவதி அம்மன் மகா கும்பாபிஷேக விழா

பிள்ளையார் நத்தம்-அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ முத்தாலம்மன் ஸ்ரீ பகவதி அம்மன் மகா கும்பாபிஷேக விழா

பிள்ளையார் நத்தம்-அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ முத்தாலம்மன் ஸ்ரீ பகவதி அம்மன் மகா கும்பாபிஷேக விழாவில் திரலாக கலந்து கொண்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் பிள்ளையார் நத்தம் ஊராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

முன்னதாக கோவில் வேலைப்பாடுகள் சிறப்பாக நிறைவு பெற்றதை அடுத்து கும்பாபிஷேக விழா நடத்த விழா கமிட்டியினரால் முடிவு செய்யப்பட்டு பக்தர்கள் காப்புக் கட்டி விரதம் இருந்து முளைப்பாரி இட்டும் காசி ராமேஸ்வரம், தலை காவேரி, குடகனாறு, கொடுமுடி, சுருளி மற்றும் புனித ஸ்தலங்களில்இருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தத்திற்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பிறகு கலசத்தினை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்தவாறு கோவிலை சுற்றி வலம் வந்த பிறகு கோபுர கலசத்தை வந்தடைந்த உடன்அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

கலசத்திற்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ முத்தாலம்மன், மற்றும் பகவதி அம்மனுக்கு சிறப்பு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. இதனை காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். ஆலயம் வருகை தந்த அனைவருக்கும்  சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

அழகர் சாமி

அழகர் சாமி