இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார்.!

கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இதயம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள்
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம்.காதர் மொய்தீன் MA EXMP விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி.
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே எம் காதர் மொய்தீன் வெளியிட்டுள்ளஅறிக்கையில். கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.
தீர்க்கதரிசி இப்ராஹிம் (ஆபிரகாம்) வழிவாற்றலில் தோன்றிய உலகப் பெரும் சமயங்கள் யூத மதம் , கிறிஸ்தவம், இஸ்லாம் என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
இச்சமயங்களில் எல்லாம் வல்ல இறைவன் ஒருவன் என்றும் அவன் புறத்திலிருந்து மானிட சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக தீர்க்கதரிசிகளை ஒவ்வொரு காலத்திற்கும் அனுப்பப்பட்டார்கள் என்றும் இவ்வுலக வாழ்க்கையில் மனிதன் புரியும் நன்மை, தீமைகளுக்கு ஏற்ப மறுமை வாழ்க்கையில் சொர்க்கம், நரகம் வாய்க்கும் என்று போதிக்கப்படுகிறது.
அந்த வகையில் நபிகள் நாயகம் (ஸல்) தோன்றுவதற்கு முன்னர் உலகில் தோன்றி நன்மையின் பக்கம் மக்களை அழைத்து உலகில் வழிகாட்டிய பெருமை இயேசு பெருமானுக்கு உரியது
இயேசு பெருமான் அமைதியின் தூதர் மக்கள் மனநலத்திற்கும், உடல் நலத்திற்கும் வழிகாட்டியவர். பரமபிதாவின் மக்களாக பாருலகினர் மதித்து போற்றப்பட வேண்டும் என்று நல்லுபதேசம் செய்த ஆன்மீக நேசர். உலக மக்கள் உள்ளன்போடு ஒன்றிணைந்து வாழும் நெறி முறையை கற்பித்த மகான். அவரின் வழிநின்று உலக மக்கள் யாவரும் ஒரு குடும்பமாக வாழ்வோம், அனைவரையும் வாழ்விப்போம்.
இவ்வாறு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் MA EX MP தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.