சேமிப்பிற்கு வரி 2025 - 2026 பட்ஜெட் மக்கள் அதிர்ச்சி. !

இந்தியா

சேமிப்பிற்கு வரி 2025 - 2026 பட்ஜெட் மக்கள் அதிர்ச்சி. !

பட்ஜெட் 2025-26, 12 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு புதிய வருமான வரி முறையின் கீழ் வரி விலக்கு என அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், நாம் செய்து வரும் பல சேமிப்புத் திட்டங்கள் மற்றும் முதலீடுகளில் புதிய வரி விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது மத்திய அரசு.

அதவாது 12 லட்சம் ரூபாய் வரையிலான உங்களது வருமானத்திற்கு வரி விலக்கு கிடைக்கும். அதே நேரத்தில் சேமிப்பு, முதலீடு திட்டங்கள் மூலம் உங்களுக்கு கிடைக்கும் வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும் என கூறப்படுகிறது.

இதனால், பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் புதிய திட்டமிடல்களை மேற்கொள்ள வேண்டும்.

எந்த சேமிப்புகளுக்கு வரி விதிக்கப்படுகிறது?

Fixed Deposit (FD) - வங்கி எப்.டி வைப்புகளில் கிடைக்கும் வட்டி வருமானத்துக்கு அதிக TDS (Tax Deducted at Source) விதிக்கப்படும்.

Recurring Deposit (RD) - மாதாந்திர சேமிப்புகளின் வட்டியிலும் வரி விதிக்கப்படும்.

Public Provident Fund (PPF) - பழைய வரி முறைமையில் மட்டும் வரிவிலக்கு கிடைக்கும். புதிய வரி திட்டத்தில் PPF வட்டி வரிக்குட்படும்.

Employee Provident Fund (EPF) - ₹2.5 லட்சத்திற்கு மேல் உள்நாட்டு முதலீட்டில் வரி விதிக்கப்படும்.

National Savings Certificate (NSC) - NSC வட்டி வருவாய் வரிக்கு உட்பட்டது.

Mutual Funds & Equity Investments -
குறுகிய கால முதலீடுகளில் (Short-term capital gains) வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

நீண்ட கால முதலீட்டில் (Long-term capital gains) புதிய வரி விதி அமலுக்கு வருகிறது.

Insurance Policies - ₹5 லட்சத்திற்கு மேல் சொந்த முதலீட்டில் வந்த லாபம் வரிக்குட்படும்.

Gold & Digital Gold Investments - தங்கம் & Digital Gold முதலீடுகளுக்கான புதிய வரி விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சேமிப்புகளை பாதுகாக்க என்ன செய்யலாம்?

EPF, PPF & NPS போன்ற திட்டங்களில் முதலீடு செய்வதற்கு பழைய வரி முறை பயன்படுத்தலாம்.

வங்கிகளில் அதிக FD வைப்பதை தவிர்த்து, குறுகிய கால முதலீடுகளை தேர்வு செய்யலாம்.

Mutual Fund மற்றும் Index Fund போன்ற முதலீடுகளை நீண்ட காலத்திற்கு (5-10 வருடம்) செய்யலாம்.

Life Insurance மற்றும் ULIP போன்ற பாதுகாப்பு திட்டங்களை மதிப்பீடு செய்து முதலீடு செய்யலாம்.

Tax-free Bonds, Government Securities போன்ற தரமான முதலீடுகளை தேர்வு செய்யலாம்.