கருணை கொலை செய்ய முதலமைச்சருக்கு மாற்றுத்திறனாளி கோரிக்கை
சேலத்தைச் சேர்ந்தவர் 51 வயதான பாஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மலேசியாவில் பல ஆண்டுகள் பணிபுரிந்து விட்டு சொந்த ஊரில் செட்டிலானவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தில் தேங்காய் கடை வைப்பதற்கு உழவர் சந்தையில் கடை கேட்டு விண்ணப்பிக்கிறார் கடை மறுக்கப்படுகிறது.
பிறகு தனியாருக்கு சொந்தமான இடத்தில் வாடகைக்கு கட்டிடம் எடுத்து மாட்டு இறைச்சி கடை நடத்த திறப்பு விழாவுக்கு முன்பு இந்து முன்னணி எதிர்ப்பால் கடை மூடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் மாலை நேர Beef சில்லி கடை போடுவதற்கு முயற்சித்தால் அதற்கும் தடை விதிக்கிறது காவல்துறை., காரணம் அதே இந்து முன்னணி எதிர்ப்பு.
பிறகு அவர் மனைவியின் பெயரில் மகளிர் குழு அமைக்கப்பட்டு உழவர் சந்தையில் மாலை நேர இயற்கை உணவகம் நடத்த அனுமதி பெறப்பட்டு கடை நடத்த தொடர்ந்து இடையூறுகள் செய்வதன் விளைவாக.
தற்பொழுது அவர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு தன்னை கருணை கொலை செய்ய வேண்டி மனு அளித்துள்ளார்.
தற்பொழுது அந்த மனு காவல் துறைக்கு மாற்றப்பட்டு இருக்கிறது இதை அறிந்த அந்த மாற்றுத்திறனாளி ஒருவேளை தன்னை கருணை கொலை செய்ய அரசு முடிவு எடுத்ததினால் தான் எனது மனுவை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பாமல் காவல்துறைக்கு அனுப்பி இருக்கிறார்களா என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார் அந்த நபர்.
இந்த தகவலை அறிந்த வெல்ஃபேர் கட்சியின் மாநில துணை தலைவர் முஹமது கவுஸ் சமூக நீதிப் பேசும் திராவிட மாடல் ஆட்சியில் மாற்றுத்திறனாளிகள் வாழ வழியில்லையா ???
இதற்கு தீர்வு காணுமா தமிழ்நாடு அரசு என்ற கேள்வியை முன் வைத்துள்ளார்.