நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் தொடர்ந்து விலகல்

சேலம்: நேற்று நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் அழகாபுரம் தங்கம் அக்கட்சியில் இருந்து விலகுவதாக முகநூலில் பதிவிட்ட நிலையில், இன்று நாம் தமிழர் கட்சியின் வீரத் தமிழர் முன்னணியின் சேலம் மாநகர மாவட்ட செயலாளர் வைரம் கட்சியில் இருந்து விலக்குவதுமாக முகநூலில் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்டு தேர்தலை சந்தித்த பிரதான அரசியல் கட்சிகளில் இதுவரை கூட்டணி அமைத்துப் போட்டியிடாத கட்சி என்றால் நாம் தமிழர் கட்சி மட்டும் தான் என்பது குறிப்பிடதக்கது.