வைக்கோல்களை எரிக்கும் விவசாயிகளுக்கு அபராதம்; டெல்லிக்கு மத்திய அரசு உத்தரவு.!
டெல்லியில் காற்று மாசுபாட்டால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த காற்று மாசுபாட்டால், குழந்தைகளின் சுகாதார நலனில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த தீபாவளி பண்டிகையின் போது கூட அங்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் தீபாவளிக்குப் பிறகும் டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.
டெல்லியில் 1 சதவீதத்துக்கும் சற்று அதிகமாக பயிர்களை விவசாயிகள் எரிப்பதால், டெல்லியில் ஏற்பட்ட காற்று மாசுபாட்டிற்கு ஒருவகை காரணம் என்று வானிலை ஆய்வுத் தரவுகள் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும்
டெல்லியில் ஏற்பட்ட காற்று மாசுபாட்டை தடுக்கும் வகையில், பயிர்க் காடுகளை எரிக்கும் விவசாயிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, 2 ஏக்கருக்கும் குறைவான நிலம் இருந்தால் ரூ.5,000 அபராதம்
2 முதல் 5 ஏக்கர் வரை இருந்தால் ரூ.10,000 அபராதமும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் இருந்தால் ரூ.30,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.