ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான நிதி பகிர்வு குறித்த பரிந்துரைகள் கூட்டம்
ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான நிதி பகிர்வு குறித்த பரிந்துரைகள் வழங்குவது தொடர்பாக சென்னையில் இன்று நடைபெற்ற 16-வது நிதிக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.
இக்கூட்டத்தில், 16-வது நிதிக் குழுவின் தலைவர் முனைவர் அரவிந்த் பனகாரியா, உறுப்பினர்கள் அஜய் நாராயண் ஜா, அன்னி ஜார்ஜ் மேத்யூ, முனைவர் மனோஜ் பாண்டா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகம் நகர்ப்புற மற்றும் நீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி, வனத்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், இ.ஆ.ப., ஆகியோருடன் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.