ஆட்சியை விமர்சித்த படம்: இயக்குனரை தோட்டத்திற்கு அழைத்த எம்.ஜி.ஆர்; எஸ்.ஏ.சி தப்பித்தாரா?
தமிழ் சினிமாவில் பல ஆக்ஷன் படங்களை கொடுத்துள்ள இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், அப்போது எம்.ஜி.ஆர் ஆட்சியை விமர்சித்து ஒரு படத்தை இயக்கியுள்ளார்.
விஜயகாந்த் நடிப்பில் பல ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். தளபதி விஜயின் அப்பாவான இவர், கடந்த 1987-ம் ஆண்டு ஒரு படத்தை இயக்கியுள்ளார். நீதிக்கு தண்டனை என்ற பெயரில் வெளியான இந்த படத்தில் ராதிகா, நிழல்கள் ரவி, செந்தாமரை, சரண்ராஜ் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.
கிராமத்தில் டாக்டராக இருக்கும் நிழல்கள் ரவி, பஞ்சாயத்து தலைவராக இருக்கும் செந்தாமரை அடித்த ஒரு ஆளுக்கு வைத்தியம் பார்க்க, அவரை கொன்றுவிட்டு, பழையை நிழல்கள் ரவி மீது போட்டுவிடுவார். இதனால் அவர் ஜெயிலுக்கு போயிவிடும் நிலையில், இதற்கு நியாயம் கேட்டு ராதிகா குழந்தையுடன் போலீஸ் ஸ்டேஷன் போக, அந்த போலீஸ் குழந்தையை கொன்றுவிடுவார். இறந்த குழந்தையை தூக்கிக்கொண்டு ராதிகா அமைச்சரிடம் செல்வார்.
அமைச்சர் சரண்ராஜ் நல்லவர் போல் நடித்து குழந்தையின் உடலை புதைத்துவிட்டு, ராதிகாவை பலாத்காரம் செய்துவிடுவார். இதை அறிந்த எம்.எல்.ஏ ரவிசந்திரனின் மனைவியான ஸ்ரீவித்யா, இந்த கேஸை கையில் எடுத்துக்கொண்டு வதாடுவார். இதில் ராதிகா, குழந்தையை கொன்றுவிட்டு விபச்சாரத்தில் ஈடுபட்டதாக முத்திரை குத்து அவரை சிறைக்கு அனுப்பிவிடுவார்கள். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்பது தான் இந்த படத்தின் கதை.
கலைஞரின் கதை வசனத்தில் வெளியான இந்த படம், எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருக்கும்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் நமக்கு ஆபத்து வரும் என்று நம்பிய எஸ்.ஏ.சி, தி.மு.க.வில் இணைய தயாரான போது எம்.ஜி.ஆரிடம் இருந்து அழைப்பு வருகிறது. இது குறித்து அவர் கலைஞரிடம் சொல்ல, போய் பேசிட்டு வாங்க தைரியமாக பேசுங்க என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். அதன்படி எம்.ஜி.ஆரை சந்திக்க எஸ்.ஏ.சி சென்றுள்ளார்.
அப்போது அவருக்கு பின்னால் வந்த அனைவரும் எம்.ஜி.ஆரை சந்தித்துவிட்டு செல்ல, இவருக்கு அழைப்பு வரவில்லை. இதனால் பிரச்னை பெரிதாகவும் என்று நினைத்த எஸ்.ஏ.சி அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்க, எம்.ஜி.ஆர் அப்போது அவரை அழைத்துள்ளார். உள்ளே சென்ற எஸ்.ஏ.சியிடம், உங்கள் நீதிக்கு தண்டனை படம் 5 முறை பார்த்தேன். இந்த மாதிரி படங்கள் வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆரின் வார்த்தைகளை கேட்ட எஸ்.ஏ.சி சந்தோஷமடைந்தாலும், உள்ளுக்குள் சற்று பயத்துடன் இருந்துள்ளார், அதன்பிறகு எம்.ஜி.ஆர் பிச்சர்ஸ்க்கு நீங்க வருடத்திற்கு ரெண்டு படம் பண்ணுங்க. ஒன்லைன் நானே சொல்கிறேன் அதை வைத்து டெவலப் பண்ணுங்க என்று கூறியள்ளார். ஆனால் அதன்பிறகு எம்.ஜி.ஆர் இறந்துவிட இந்த வாய்ப்பும் கைநழுவிப்போனது.