தோற்றாலும் 169 கோடி பரிசு - குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன்
தோற்றாலும் 169 கோடி பரிசு - குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன்
பிரபல குத்துச்சண்டை ஜாம்பவனான மைக் டைசன் 19 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோதாவில் இறங்கி 169 கோடியை பரிசாக தட்டிச் சென்றார்
குத்துச்சண்டை ஜாம்பவான் என்றழைக்கப்படும் மைக் டைசனுக்கு, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
1985 முதல் 2004 வரை குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று எதிர்த்து நிற்கும் வீரர்களை வீழ்த்தி உலகம் முழுவதும் பிரபலமானவர்.
போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற அவர் நீண்ட நாட்களுக்கு பிறகு, அதாவது 19 ஆண்டுகள் கழித்து மீண்டும் களமிறங்கினார்.
58 வயதான மைக் டைசன் இளம் வீரரான 27 வயது நிரம்பிய ஜேக் பாலை எதிர்கொண்டார்.
அமெரிக்காவின் டெக்சாஸில் இந்தப் போட்டி 8 சுற்றுகளாக நடந்தது.ஜாம்பவான் மைக் டைசனை 27 வயது இளைஞர் ஜேக் பால் வீழ்த்தினார்.
தொடக்கம் முதல் டைசன் அட்டாக் மோடில் இருக்க, ஜேக் பால் தன்னை காப்பாற்றிக்கொண்டு எதிர்பாராத சமயத்தில் மைக் டைசன் மீது தாக்குதல் நடத்தி வெற்றியும் பெற்றார்.
இந்த போட்டியில் வென்ற ஜேக் பால் மற்றும் தோற்ற மைக் டைசன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
வெற்றி பெற்ற ஜேக் பாலுக்கு ரூ.338 கோடியும், தோற்ற மைக் டைசனுக்கு ரூ.169 கோடியும் பரிசுத் தொகையாக கிடைத்து இருக்கிறது.
கூண்டோடு நாடு கடத்தப்படும் மக்கள்.! டிரம்ப் மாஸ்டர் பிளான் இந்தியர்களின் நிலை
https://www.newstodaytamil.com/Caged-Deportation-People-Trump-Master-Plan-Status-of-Indians