கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் ஆணைய ஆலோசனைக் கூட்டம்
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் ஆணைய ஆலோசனைக் கூட்டம் மற்றும் சிறுபான்மையினருக்கென தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது .
இந்நிகழ்வில் கோவை வடக்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் M. அப்துல் ஹக்கீம் கலந்து கொண்டு கோவை வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட காரமடை புஜங்கனூர் பகுதியில் அமைந்துள்ள காளம்பாளையம் ஆஷூர்கானா பள்ளிவாசல் ( முஸ்லிம் பரியல் கிரவுண்ட் ) மற்றும் பகதூர் பள்ளிவாசல் பராமரிப்பு மற்றும் கட்டிடம் புனரமைப்பு பணிகள் செய்வதற்காக மாவட்ட ஆட்சியருக்கு அனுமதி வேண்டி மனு அளித்தும் அனுமதி வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதையும் , வக்பு வாரியத்திற்கு சொந்தமான பள்ளிவாசல் இடத்தை அங்கு இருக்கும் ஒரு சிலர் எங்கள் வழித்தடம் என்று ஆவணமின்றி எதிர்ப்பு வைத்துக்கொண்டு அரசு அதிகாரிகள் ஆவணத்தின் அடிப்படையில் தீர்வு காணாமல் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்களின் கோரிக்கைகளை நிலுவையில் வைத்திருப்பதையும் சுட்டி காட்டினார்.
சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் ஜோ. அருண் முன்னிலையில் கோரிக்கை வைக்கப்பட்டது. உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார் சிறுபான்மை ஆணைய தலைவர்.
கோவை வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பள்ளிவாசல்கள் மற்றும் கபருஸ்தான் ஆகிய இடங்கள் ஆவணம் இருந்தும் வேண்டுமென்று நிலுவையில் வைத்திருக்கும் சில அதிகாரிகளின் செயல்களையும் கூட்டத்தில் தெளிவு படுத்தினர்.
உடன் புஜங்கனூர் பள்ளிவாசல் தலைவர் சையது இப்ராஹிம் மற்றும் நிர்வாகிகள் ரிஜ்வான் மற்றும் முபாரக், பகதூர் பள்ளிவாசல் செயலாளர் சலீம் மேட்டுப்பாளையம் ஐக்கிய ஜமாஅத் தலைவர் முகமது ஷரீஃப், ஐக்கிய ஜமாஅத் செயலாளர் அக்பர் அலி ஆகியோர் கலந்து கொண்டனர் .
இறுதியாக தங்களிடம் கனிவுடன் பரிசீலித்த தமிழ்நாடு அரசு சிறுபான்மை நல ஆணைய தலைவர் ஜோ. அருண் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் கிரண் குமார் பாடி , கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் , வருவாய் துறை அதிகாரிகள் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொண்டனர் கோவை வடக்கு மாவட்ட மமக & தமுமுக வினர்.
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi ( MR )
விளம்பர தொடர்புக்கு
97 87 41 64 86