ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் கருகிய உடல்கள்; அடையாளம் காண்பதில் சிக்கல்

ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் கருகிய உடல்கள்; அடையாளம் காண்பதில் சிக்கல்

மதுரை: மதுரையில் ரயிலில் நேரிட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பது அதிகாரிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது.

உத்தர பிரதேசத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு சுற்றுலா வந்த ரயில், மதுரை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது, ஒரு பெட்டியில் இருந்த பயணிகள் காபி தயாரிக்க சிலிண்டரை பற்றவைத்த போது வெடித்துச் சிதியதில் 10 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 20-க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண ரயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் மாவட்ட அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

ஆனால், உடல்கள் அனைத்தும் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகிவிட்டதால், அதிகாரிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இதுதவிர்த்து மதுரையில் உள்ள அதிகாரிகளுக்கு மொழி ஒரு தடையாக இருப்பதால், உயிர் பிழைத்தவர்களை தொடர்பு கொள்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.