அமெரிக்க அதிபர் தேர்தலில் யாருக்கு வெற்றி; கணிப்பில் கலக்கியது தாய்லாந்து நீர் யானை!

அமெரிக்க அதிபர் தேர்தலில் யாருக்கு வெற்றி; கணிப்பில் கலக்கியது தாய்லாந்து நீர் யானை!

அமெரிக்க அதிபர் தேர்தலில் யாருக்கு வெற்றி; கணிப்பில் கலக்கியது தாய்லாந்து நீர் யானை!

உலக நாடுகள் உற்று பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவ.,5) நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மாலை 4.30 மணி முதல் மறுநாள் காலை 6.30 மணி வரை (அமெரிக்க நேரப்படி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு) ஒவ்வொரு மாகாணங்களாக ஓட்டுப்பதிவு தொடங்குகிறது.இந்திய நேரப்படி நாளை காலை 9.30 மணிக்குள் அனைத்து மாகாணங்களிலும் ஓட்டுப்பதிவு முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தேர்தலில் யாருக்கு வெற்றி என்பது பற்றி நாள்தோறும் புதுப்புது யூகங்களும், கணிப்புகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதில் லேட்டஸ்ட்டாக தாய்லாந்து நீர்யானை தந்துள்ள கணிப்பு தான் அனைவர் மத்தியிலும் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

அதுபற்றிய விவரம் வருமாறு:

தாய்லாந்தில் ஜோன்புரி பகுதியில் இருக்கும் கா கேவோவ் என்ற திறந்தவெளி உயிரியல் பூங்காவில் மூ டெங் (Moo Deng) என்று பெயரிடப்பட்ட குட்டி நீர்யானை உள்ளது. அந்த பெண் யானையானது, அமெரிக்க தேர்தலில் டொனால்டு டிரம்ப் தான் வெற்றி பெறுவார் என்று கணித்துள்ளது. கணிப்புக்காக, குட்டி நீர்யானை முன்பாக இரண்டு தர்பூசணி பழங்கள் வைக்கப்பட்டது. ஒரு பழத்தில் தாய் மொழியில் (தாய்லாந்தின் உள்ளுர் மொழி தாய்) டொனால்டு டிரம்ப் பெயரும், மற்றொரு பழத்தில் கமலா ஹாரிஸ் பெயரும் எழுதி வைக்கப்பட்டு இருந்தது.

அந்த பழங்களில் டிரம்ப் பெயர் எழுதியிருந்த பழத்தை குட்டி நீர் யானை சாப்பிட்டது. அருகில் இருந்த மற்றொரு பெரிய நீர்யானை, கமலா ஹாரிஸ் என்ற பெயர் கொண்ட பழத்தைச் சாப்பிட்டது. இதன் மூலம் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கே வெற்றி என்று மூ டெங் கணித்துள்ளதாக உயிரியல் பூங்கா ஊழியர்கள் கூறுகின்றனர். குட்டி நீர் யானையின் இந்த கணிப்பு வீடியோ இப்போது உலகம் எங்கும் வைரலாகி வருகிறது.