இலங்கை நாடாளுமன்ற தேர்தல். வெற்றிக்கு தேவையான பெருபான்மை இடங்களை கைப்பற்றியது NPP
இலங்கையில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் NPP கட்சி வெற்றி பெற்று அதிபராக அனுரகுமார திச நாயக்க பொறுப்பேற்றார்.
இதைத்தொடர்ந்து நேற்று இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தொடக்கம் முதலே ஆளும் கட்சி ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் தற்போது பெரும்பான்மைக்கு தேவையான 123 இடங்களை ஆளும் கட்சி பிடித்துள்ளது.
இந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி 21 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் தற்போது அனுரா குமார திச நாயக்கேவின் ஆளும் கட்சி வெற்றி பெற்றது. மேலும் நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெற்றதை அக்கட்சியினர் கொண்டாடி வருகிறார்கள்.