தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி. நவ. 22 சம்பவம் ஆரம்பம்

தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி. நவ. 22 சம்பவம் ஆரம்பம்

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தின் அருகே நிலவிய நிலையில் அது வலுவிழந்தது.

இந்நிலையில் தற்போது தென்கிழக்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி வருகிற 22ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. இந்நிலையில் இன்று தமிழ்நாட்டில்பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இன்று காலை முதல் சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதாவது சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்த நிலையில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.