ரூ.1.28 கோடி மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே தாமலேரிமுத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில்,
ரூ.ஒரு கோடியே 28 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பில் கூடுதலாக ஆறு வகுப்பறை கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட்டது.
அதனை தமிழக முதல்வர் வீடியோ கான்பரன்ஸ் முறையில் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமை வகித்தார். ஒன்றிய குழு தலைவர் சத்யா சதீஷ்குமார் முன்னிலை வகித்தார்.
தலைமை ஆசிரியர் ரகுபதி வரையற்றார்.
சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏ தேவராஜி கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.
அப்போது மாவட்ட கவுன்சிலர் கவிதா தண்டபாணி,ஒன்றிய கவுன்சிலர் உமாகன்ரங்கம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து பள்ளி வளாகத்தில் கலெக்டர் தர்ப்பகராஜ் மரக்கன்று நட்டார்.
ந.வெங்கடேசன்