சின்னாளபட்டி- காந்தி கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் ஒருநாள் தேசிய கருத்தரங்கம்
திண்டுக்கலிலுள்ள காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் இந்தித்துறையில் நடைபெற்றது.
ஒரு நாள் தேசிய கருத்தரங்கில் இந்தி துறைத் தலைவர் சலீம் பெய்க் வரவேற்புரை ஆற்றினார்.
பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் பஞ்சநதம் அவர்களின் தலைமை உரையில் இந்தி மொழியின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசினார்.
சிறப்புரையில் மொழிப்புலம் தலைவர் முத்தையா மற்றும் தமிழ் துறைத் தலைவர் ஆனந்தகுமார் ஆகியோர் இந்தி படிப்பதன் அவசியத்தைப் பற்றி கூறினர்.
ஒருநாள் தேசிய கருத்தரங்கின் முதல் அமர்வின் தொடக்க உரையில் டாக்டர் ஷேக் கரிமுல்லா பேசினார். டாக்டர் பட்டான் ரஹீம் கான் முக்கிய உரையாற்றினார்.
இந்தி துறையின் துணை பேராசிரியர் சந்து லக்ஷ்மன் நன்றியுரை கூறினார்.
விழாவின் அடுத்த நிகழ்வாக ஒரு நாள் தேசிய கருத்தரங்கின் முதல் அமர்வை டாக்டர் நாராயணரராஜூ மற்றும் டாக்டர் சப்ரம்மா ஆகியோர் தலைமையேற்று நடத்தினர்.
இரண்டாம் அமர்வு மதியம் 2 மணிக்கு துவங்கியது. இரண்டு அமர்வுகளை டாக்டர் நாராயண ராஜூ, டாக்டர் ரோகினி பாண்டியன் ஆகியோர் தலைமையேற்று நடத்தினர்.
மூன்றாம் அமர்வு மாலை 3.30 மணிக்கு துவங்கியது. அமர்வை டாக்டர் பட்டான் ரஹீம் கான் மற்றும் டாக்டர் லதா சௌஹான் ஆகியோர் தலைமையேற்று நடத்தினர்.
மூன்று அமர்வுகளிலும் சேர்த்து 30 பேர் பங்கு பெற்று தங்களது கட்டுரைகளைப் படித்து காண்பித்தனர். நிறைவாக இந்தி துறைத் தலைவர் சலீம் பெய்க் அவர்கள் நன்றியுரை கூற இனிதே விழா நிறைவு பெற்றது.
அழகர் சாமி