பத்துவகை நாடிகள்

Pulse Remedies

பத்துவகை நாடிகள்

பத்துவகை நாடிகள்

1. இடகலை நாடி எனப்படும் (வளி) வாத நாடி

2. பிங்கலை எனப்படும் (அனல்) பித்த நாடி

3. சுழி முனை எனப்படும் ஐய நாடி

4. சிங்குவை எனப்படும் உள்நாக்கு நாடி

5. புருடன் எனப்படும் வலக்கண் நாடி

6. காந்தாரி எனப்படும் இடக்கண் நாடி

7. அத்தி எனப்படும் வலச்செவி நாடி

8. சங்கினி எனப்படும் ஆண், பெண் குறி நாடி

9. அலம்புபடை எனப்படும் இடச்செவி நாடி

10. குரு நாடி எனப்படும் எரு வாயில் நாடி

நாடி பார்க்கும் மாதங்கள்

சித்திரை,வைகாசி - காலை (உதயம்) 

ஆனி, ஆடி, ஐப்பசி, கார்த்திகை - நண்பகல்

மார்கழி, தை, மாசி - மாலை

ஆவணி, புரட்டாசி, பங்குனி - இரவு

யார் யாருக்கு நாடி தெளிவாக காண இயலாது

உடலுறவு கொண்ட சமயத்தில், ஒன்றுக்கும் மேற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், நீண்ட நேரம் வாகனம் ஓட்டியதால் களைப்படைந்தவர்கள், வயிறு நிறைய சாப்பிட்டவர்கள், மழையில் நனைந்து ஈரமான நிலையில் உள்ளவர்கள், அடிக்கடி விக்கல் எடுப்பவர்கள், நாட்டியம் ஆடி முடித்தவுடன், மூச்சு பயிற்சி செய்தவர்கள், தலையில் எண்ணெய் தேய்த்து குளித்தவர்கள், பயந்த சுபாவம் உடையவர்கள், விஷம் சாப்பிட்டவர்கள், அதிகமாக கவலைப்படுபவர்கள், அதிகப் பசி உள்ளவர்கள், பூப்படையும் வயதில் உள்ள பெண்கள், அதிகமாக கோபப்படுபவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நோன்பு - விரதம் இருப்பவர்கள் என இவர்களுக்கு தெளிவாக நாடி பார்க்க முடியாது.

https://www.newstodaytamil.com/Disease-prediction-method-in-psychic-medicine

 

ஆசிரியர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் Rafi ( MR )