அகத்தின் நோய்கள் நகத்தில் தெரியும்.!
Health Tips

அகத்தின் நோய்கள் நகத்தில் தெரியும் என்பார்கள். அதை விளக்கமாக பார்ப்போம்.!
லேசான சிவப்பு நிறத்தில் சற்று பளபளப்பாக இருக்கும் கை விரல் நகங்களில் ஒரு சிறு வளர்பிறை வடிவம் இருந்தால் உடலில் நல்ல ரத்த ஓட்டத்தைக் குறிக்கும்.
நகங்களில் சொத்தை விழுந்து கறுத்து காணப்பட்டால் உடலுக்குப் போதிய ஊட்டச் சத்துக்கள் கிடைக்கவில்லை என்று பொருள்.
நகங்கள் மிகவும் சிவந்து காணப்பட்டால் உடலினுள் ரத்தத்தின் அளவு அதிகம் என்பதை காட்டுகிறது. இவர்களுக்கு இரத்தக் கொதிப்பு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
விரல் நகங்கள் சற்று நீல நிறமாக இருந்தால் இதயம் பலவீனமாக இருப்பதாக அர்த்தம்.
விரல் நகங்கள் சற்று மஞ்சள் நிறத்தில் இருந்தால் ரத்தத்தில் நிகோடின் விசம் கலந்திருக்கிறது என்று அர்த்தம்.
கை விரல் நகங்கள் உப்பினாற் போல் இருந்தால் ஆஸ்துமா போன்ற மூச்சு சம்பந்தமான பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது.
கை விரல் நகங்களில் வெள்ளைப் புள்ளிகள் இருந்தால் உடல் நலம் குன்றி இருப்பதாக அர்த்தம்.
கை, விரல் நகங்கள் வெளுப்பாக இருந்தால் உடலில் போதிய ரத்தம் இல்லை என்பதற்கு அடையாளம்.
கை, விரல் நகங்களில் வரிகள் அதிகமாக இருந்தால் வாயு தொல்லை இருப்பதற்கான அறிகுறி ஆகும்.
உங்கள் கருத்துக்களை பதிவிடவும் வாசக பெருமக்களே.!
நன்றி வாசகர்களே
மேட்டுப்பாளையம் ரபி ( மு.ர.)