நெடுஞ்சாலை துறையின் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது பொதுமக்கள் போராட்டம்

நெடுஞ்சாலை துறையின் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது பொதுமக்கள் போராட்டம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதிகளில் கடந்த சில தினங்களாக நெடுஞ்சாலை துறையின் சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது.

மேட்டுப்பாளையம் ஊட்டி பிரதான சாலை, சிறுமுகை பிரதான சாலை மற்றும் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் சாலை விரிவாக்கப் பணிக்காக ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர் தேசிய நெடுஞ்சாலை துறையினர்.

இதன் ஒரு பகுதியாக பழைய சந்தைக்கடை பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வந்தனர் நெடுஞ்சாலை துறையினர்.

அப்போது சிறுமுகை சாலை பழைய சந்தைக் கடையில் சாலை ஓரமாக கட்டப்பட்டுள்ள வீடுகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற முற்பட்டனர்.

அப்போது அங்குள்ள குடியிருப்பு வாசிகள் நெடுஞ்சாலை துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் முற்றி சாலை மறியல், ஆர்ப்பாட்டம் என போராட்டம் நடத்த முடிவு செய்தனர் அப்பகுதி குடியிருப்புவாசிகள்.

அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் துறையினர் மக்களை போராட விடாமல் தடுத்தனர்.

பின்னர் மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சின்னகாமனன் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடமும், குடியிருப்புவாசிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தையின் இறுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்களுக்கு அவகாசம் கொடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார் காவல் ஆய்வாளர்.

நெடுஞ்சாலை துறையினரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற 15 நாட்கள் அவகாசம் கொடுத்தனர். இதனை ஏற்றுக் கொண்ட குடியிருப்பு வாசிகளும், பொதுமக்களும் போராட்டத்தை கைவிட்டு விட்டு , வரும் 15 நாட்களுக்குள் ஆக்கிரமிப்பு பகுதிகளை தாங்களாகவே அகற்றி தருவதாக ஆய்வாளர் சின்னகாமனனிடம் தெரிவித்தனர்.

இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பிரச்சினை சற்று நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆசிரியர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் Rafi ( MR )  

விளம்பர தொடர்புக்கு 

97 87 41 64 86