அமெரிக்க அதிபர் தேர்தல்.. இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு ரிசல்ட் வெளியாகும்? மாகாண வாரியாக லிஸ்ட்

அமெரிக்க அதிபர் தேர்தல்.. இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு ரிசல்ட் வெளியாகும்? மாகாண வாரியாக லிஸ்ட்
அமெரிக்க அதிபர் தேர்தல்.. இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு ரிசல்ட் வெளியாகும்? மாகாண வாரியாக லிஸ்ட்

வாஷிங்டன்: அமெரிக்காவில் புவியியல் அமைப்பு படி 4 வகையான நேர விகிதங்கள் பின்பற்றப்படுகிறது. அதாவது மாகாணங்களுக்கு இடையே ஒரு மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை வித்தியாசம் உள்ளது.

இதில் கடும் போட்டி நிலவும் மாகாணங்களில் இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு வாக்குப்பதிவு துவங்கும்? எப்போது ரிசல்ட் வெளியாகும்? என்று இங்கே பார்ப்போம்.

அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் ஆகும். இதனால் அங்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. தற்போது அதிபராக இருக்கும் ஜோ பைடனின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரியுடன் முடிவுக்கு வருகிறது. அமெரிக்க நாட்டு சட்டப்படி அதிபர் தேர்தல், நவம்பர் மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை நடைபெறும்.

அமெரிக்க அதிபர் தேர்தல்: அதன்படி அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் தற்போது துணை அதிபராக இருக்க கூடிய கமலா ஹாரிசும் போட்டியிடுகிறார்கள். அமெரிக்காவில் அதிபரை மக்கள் நேரடியாக தேர்வு செய்யவில்லை. அமெரிக்காவில் மக்கள் வாக்குகளை வைத்து நேரடியாக வெற்றியாளரை தேர்வு செய்ய மாட்டார்கள். மாறாக எலக்ட்ரல் வாக்குகள் பயன்படுத்தப்படும்.

எத்தனை மணிக்கு துவங்குகிறது?: அமெரிக்காவில் மொத்தம் 538 எலக்ட்ரல் வாக்குகள் உள்ளன. இதில் 270 வாக்குகளை அதிபர் வேட்பாளர் பெற வேண்டும். உலகமே எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. அமெரிக்காவை பொறுத்தவரை அங்கு மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. இதில் கடும் போட்டி நிலவும் மாகாணங்களில் இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு வாக்குப்பதிவு துவங்கும்? எப்போது ரிசல்ட் வெளியாகும்? என்று இங்கே பார்ப்போம்.

4 வகையான நேர விகிதம்: அமெரிக்காவில் புவியியல் அமைப்பு படி 4 வகையான நேர விகிதங்கள் பின்பற்றப்படுகிறது. அதாவது மாகாணங்களுக்கு இடையே, ஒரு மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை வித்தியாசம் உள்ளது. இந்திய நேரப்படி பார்த்தால், நமது நாட்டிற்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான நேர வித்தியாசம் 10.30 மணி நேரம் ஆகும். அமெரிக்காவில் இன்று (நவம்பர் 5) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது என்றால் இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும்.

பென்சில்வேனியா: வாக்குப்பதிவு முடியும் போது இந்தியாவில் கிட்டத்தட்ட அதிகாலை 4.30 மணியாகிவிடும். அமெரிக்கவில் உள்ள சில மாகாணங்களில் கடுமையான போட்டி நிலவுகிறது. குறிப்பாக பென்சில்வேனியாவில் என்ன மாதிரியான முடிவுகள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பென்சில்வேனியாவில் மொத்தம் 19 எலக்ட்ரோல் வாக்குகள் உள்ளன. பென்சில்வேனியாவில் இந்திய நேரப்படி இன்று மாலை 5.35 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. நாளை அதிகாலை 6.30 மணிக்கு (அமெரிக்க நேரம் 8 மணி) முடிவடையும்.

ஜார்ஜியா மாகாணம்: ஜார்ஜியா மாகாணத்தில் இன்று மாலை 5.35 மணிக்கு தொடங்கி அதிகாலை 6.35 மணிக்கு முடிவடையும். இந்த மாகாணத்தில் கடந்த முறை டிரம்பை ஜோ பைடன் தோற்கடித்து இருந்தார். ஜோ பைடன் 49.5 சதவிகித வாக்குகளும் டிரம்ப் 49.3 சதவிகித வாக்குகளும் பெற்று இருந்தனர்.

அரிசோனா மாகாணம்: அரிசோனா மாகாணத்தில் இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கி நாளை அதிகாலை 7.30 மணிக்கு முடிவடையும். அரிசோனா மாகாணத்தில் எலக்ட்ரோல் வாக்குகள் ஜனநாயக கட்சிக்கே இருமுறை கிடைத்துள்ளது. ஆனாலும் இந்த மாகாணத்தில் கடும் போட்டி இரு கட்சிகளுக்கும் இடையே நிலவுகிறது.

ரிசல்ட் எப்போது வெளியாகும்?: அமெரிக்க அதிபர் தேர்தலை பொறுத்தவரை வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்குகள் எண்ணப்படும். அனைத்து மாகாணங்களிலும் வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். மேலும் அன்றைய தினமே முடிவும் அறிவிக்கப்பட்டுவிடும். இந்திய நேரப்படி நாளை காலையில் அமெரிக்காவின் புதிய அதிபர் யார் என்று தெரிந்துவிடும். ஒருவேளை இழுபறி நீடித்தால், தேர்தல் முடிவை அறிவிக்க ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களோ ஆகும் என்று கூறப்படுகிறது.