ஆன்லைனில் ரூ.6.28 கோடி மோசடி மேலும் 5 பேரை கைது செய்தது ஒடிசா போலீஸ்

ஆன்லைனில் ரூ.6.28 கோடி மோசடி மேலும் 5 பேரை கைது செய்தது ஒடிசா போலீஸ்

புவனேஷ்வர்: ஒடிசாவை சேர்ந்த ஒருவர் ஆன்லைனில் ரூ.6.28கோடி மோசடி செய்யப்பட்டதாக போலீசில் புகார் கொடுத்தார்.

பாதிக்கப்பட்ட நபர் வாட்ஸ்அப் குழு ஒன்றில் சேர்ந்துள்ளார்.
இதில் பணத்தை முதலீடு செய்தால் பல மடங்கு திரும்ப கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறப்பட்டுள்ளது. இதனை நம்பிய அவர் முதலில் ரூ.19 முதலீடு செய்துள்ளார். பின்னர் உடனடியாக ரூ.110 அவரது வங்கி கணக்கிற்கு வந்துள்ளது. இவ்வாறு சிறிது சிறிதாக முதலீட்டு தொகை அதிகமாக்கப்பட்டுள்ளது. இவருக்கு சேரவேண்டிய தொகை ரூ.25 கோடியாக உயர்ந்துள்ளது.
இதனை தொடர்ந்து வாட்ஸ்அப் குழுவின் அட்மின் சம்பந்தப்பட்ட நபர் ரூ.23 கோடியை எடுத்துக்கொள்வதற்கு அனுமதித்துள்ளார்.

இதற்கான பரிவர்த்தனையை மேற்கொண்டபோது அவர் அந்த குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் வங்கி பரிவர்த்தனை உள்ளிட்ட விவரங்களின் அடிப்படையில் 29 பேர் போலீசாரால் அடையாளம் காணப்பட்டனர். இந்த ஆன்லைன் மோசடி தொடர்பாக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 24 பேரை ஒடிசா போலீசார் கைது செய்தனர். தமிழ்நாட்டை சேர்ந்த 9 பேர், குஜராத்தை சேர்ந்த 8 பேர், ராஜஸ்தானை சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆன்லைன் மோசடி தொடர்பாக கேரளாவின் திரிச்சூர், மலப்பூரத்தை சேர்ந்த 5 பேரை ஒடிசா போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் ஒடிசா அழைத்து செல்லப்பட்டு காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.