பக்கத்து வீட்டு பெண்ணுடன் தகராறு, பழிவாங்க 10 சிறுவனை வைத்து 6 வயது சிறுமியை பாலியல் உறவில் ஈடுபடுத்தி வீடியோ வெளியிட்ட பெண். !
மும்பை
மராட்டிய மாநிலம் நவி மும்பை, கன்சோலி கிராமத்தில் வசிக்கும் 40 வயது பெண்ணுக்கும், பக்கத்து வீட்டு பெண்ணுக்கும் இடையே நீண்ட காலமாக தகராறு நிலவி வந்தது.
சிறிய விஷயங்களுக்குக் கூட அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதால், இருவருக்குமிடையே பகை தீவிரமடைந்தது. பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கு 10 வயது மனநலம் பாதித்த மகன், 6 வயது மகள் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில், பழி வாங்கும் நோக்கில், அந்த 40 வயது பெண், மனநலம் பாதித்த சிறுவனை அழைத்து, அவனது இளைய சகோதரியிடம் பாலியல் உறவில் ஈடுபடும்படி தூண்டியுள்ளார்.
மேலும், அந்தக் காட்சியை வீடியோவாக பதிவு செய்து, பின்னர் சமூக ஊடகங்களில் பரப்பியதும் தெரியவந்துள்ளது. சம்பவத்தை அறிந்த பக்கத்து வீட்டு பெண், அதிர்ச்சியடைந்து, குறித்த பெண்ணிடம் விளக்கம் கேட்டதுடன், உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், சம்பவத்துக்குப் பின்னால் உள்ள சூழல் மற்றும் அந்த பெண்ணின் சதி திட்டம் குறித்து போலீசார் விசாரணை தொடங்கினர்.
இந்த சம்பவம் தொடர்பாக போக்சோ சட்டம், புதிய குற்றவியல் சட்டம் மற்றும் ஐ.டி. சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் ஏற்பட்ட தகராறில், குழந்தைகளை பயன்படுத்தி பழிவாங்கியதும், அதற்கான வீடியோவை வைரலாக்கியதும் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
