“ஜெய்பீம் படத்திற்கு விருது அறிவிக்கப்படாதது ஏன்?“ – நடிகர் பிரகாஷ்ராஜ்

“ஜெய்பீம் படத்திற்கு விருது அறிவிக்கப்படாதது ஏன்?“ – நடிகர் பிரகாஷ்ராஜ்

சென்னை:  ‘ஜெய்பீம்‘ படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்படாதது ஏன்? என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பி உள்ளார்.

2021ஆம் ஆண்டுக்கான 69ஆவது தேசிய திரைப்பட விருதுகள் சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டன. அதில் ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் ‘ இந்திப்படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த தமிழ்த் திரைப்படமாக கடைசி விவசாயியும், சிறந்த தேசிய ஒருமைப்பாட்டுத் திரைப்படமாக தி காஷ்மீர் ஃபைல்ஸ் படமும் விருதுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  சிறந்த நடிகர், நடிகையர் உள்பட அனைத்து விருதுகளும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அதேவேளையில் தமிழ்ப் படங்களான கர்ணன், சார்பட்ட பரம்பரை, ஜெய்பீம் போன்ற படங்கள் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்படாதது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக ஜெய்பீம் படம் புறக்கணிக்கப்பட்டது குறித்து ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம்இயக்குநர் சுசீந்திரன், நடிகர்கள் நானி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக நடிகர் பிரகாஷ்ராஜூம்  குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், காந்தியை கொன்றவர்கள், இந்திய அரசியலமைப்பை தந்த அம்பேத்கரின் சமத்துவ தத்துவத்தை கொல்ல முயற்சிப்பவர்கள் ஜெய்பீம் படத்திற்கு எப்படி விருது தருவார்கள்?  எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.