மெஸ்சி VS ரொனால்டோ; யார் சிறந்த வீரர்?  மீண்டும் அனல்பறக்கும் கால்பந்து உலகம்  

மெஸ்சி VS ரொனால்டோ; யார் சிறந்த வீரர்?  மீண்டும் அனல்பறக்கும் கால்பந்து உலகம்  

மீண்டும் அதகளப்படும் கால்பந்து உலகம். வேறென்ன, உலகின் தலைச்சிறந்த கால்பந்து வீரர் மெஸ்சியா அல்லது ரொனால்டோவா? .என சமூகவலைதளங்களில் நடைபெற்று வரும் அனல்பறக்கும் விவாதம் தான் அதற்குக் காரணம்.

சௌதி அரேபியாவில் நடைபெற்ற அரபு கிளப் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் போர்ச்சுகல் நட்சத்திர வீரர்  கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அல் நாசர் அணி கோப்பையை வென்றதால், ரொனால்டோ தான் சிறந்த வீரர் என்று அவரது ஆதரவாளர்களின் கருத்தாகும்.

அமெரிக்காவில் நடைபெற்ற எம்எல்எஸ் கால்பந்து தொடரில் அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி தலைமையிலான அணி பட்டம் வென்றதால், மெஸ்சியே சிறந்த வீரர் என்று அவரை ஆதரிப்பவர்களும் பேசி வருகின்றனர். இதனால் கால்பந்து உலகில் இதுபற்றிய விவாதம் பரபரப்பாக நடந்து வருகிறது.  

இவ்விரண்டு வீரர்களும் தங்களது தலைமுறையில் சிறந்த வீரர்கள் என்பதும், செயல் திறனில் வேறு யாரும் இவர்களை நெருங்க முடியாது என்பதிலும் எள்ளளவும் சந்தேகமில்லை.  அதேவேளையில், அவர்கள் இருவருக்குமிடையே 7 முக்கிய வேறுபாடுகள் இருப்பதாக கூறுகின்றனர் அலசி ஆராய்ந்த கால்பந்து நிபுணர்கள். அவை எவை என்பதை தற்போது விரிவாகப் பார்க்கலாம்.

1. Finishing  (முடித்து வைத்தல்) 

கடந்த 5 ஆண்டுகளில் இவ்விருவரும் பல அணிகள் அடித்த கோல்களைவிட அதிக கோல்களை அடித்துள்ளனர். இதன் காரணமாகவே கடந்த 5 ஆண்டுகளில், உலகின் தலைச்சிறந்த வீரருக்கான பாலன் டி'ஓரின் முதல் 2 இடங்களை இவர்களைத் தவிர வேறு யாரும் பிடிக்கவில்லை.  Finishing –ல் ரொனால்டோ திடமானவர். அது அவரது மிகப்பெரிய பலம். நெருக்கமான இடமாக இருந்தாலும் சரி, நீண்ட தூரத்திலிருந்து அடிப்பதாக இருந்தாலும் சரி ஒரு நிமிடத்தில் கோலடித்து விடுவார். Finishing செய்வதற்கு அவர் வலிமையை பெரிதும் நம்பியிருக்கிறார். இது பெரும்பாலும் அவருக்கு கை கொடுக்கிறது.  

ஆனால், லியோனல் மெஸ்சி அதிலிருந்து வேறுபடுகிறார். அவர் தனது ஷாட்கள் துல்லியமாக இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துகிறார். அதனை அவர் எப்போதும் கனகச்சிதமாக நிறைவேற்றுகிறார். மெஸ்சியின் அற்புதமான நுட்பமும், துல்லியமும் அவருக்கு உறுதுணையாக இருக்கிறது. மெஸ்சியின் இந்த பலம் அவரை பல கோல்களை அடிக்க அனுமதிக்கிறது. ஏனெனில், நுட்பம் என்பது வயது அதிகரித்தாலும் ஒருபோதும் குறையாது.

2. Dribbling  (சிறிது சிறிதாக பந்தை கடத்திச் செல்லுதல்) 

ஒரு காலத்தில் ரொனால்டோ உலகின் சிறந்த Dribbler –களில் ஒருவராகத் இருந்தார். முன்பு விளையாடிய அணிகளில், பந்தை எதிரணியிடமிருந்து லாவகமாகப் பறித்து, பல வீரர்களைக் கடந்து கோல் அடிப்பதில் வல்லவராக திகழ்ந்தார். அவரது இந்த அசாத்திய திறன் எதிரணி தடுப்பாட்டக்காரர்களின் (Defenders) தூக்கத்தை கலைத்ததுண்டு. ஆனால், சமீபகாலமாக அவரால் முன்பு போல் பந்தை Dribble செய்வதில்லை. ஒரு கட்டத்தில், அவர் பந்தை எவ்வாறு உருட்டுவார் என்பது எதிரணியினர் யூகிக்கக்கூடியதாக மாறியது. லா லிகா தொடரில் ரொனால்டோவின் Dribbling திறன் அவருக்கு அவ்வளவாக கைகொடுக்கவில்லை.

ஆனால், மெஸ்சியைப் பொறுத்தவரையில் அவர் உலகின் தலைச்சிறந்த Dribbler என்பதில் சந்தேகமில்லை. மெஸ்சி Dribbling செய்யும்போது பந்துக்கும் அவருக்குமான நெருக்கம் மற்றும் கட்டுப்பாடு மிகவும் வியக்க வைப்பதுடன், அவர் அதனை எப்படி செய்கிறார்? என்று காண்போரை வியக்கவும் வைக்கிறது. ஒரு சில தருணங்களில் பந்து அவரது காலில் ஒட்டிக் கொண்டதுபோல் தோன்றுகிறது. சில சமயங்களில் பந்து அவருடன் பிறந்தது போலவும், அது அவரது காலின் நீட்சி போன்றும் இருக்கிறது. இந்த திறனில் மெஸ்சி ரொனால்டோவைவிட அல்லது வேறு எந்த வீரரை விடவும், விவாதத்திற்கு இடமின்றி மேம்பட்டவராக விளங்குகிறார்.  

3. Aerial Threat (வான்வழி அச்சுறுத்தல்) 

சக வீரர்களிடமிருந்து வான்வழியில் வரும் பந்தை கையாளும் போது ரொனால்டோ குதிப்பதில்லை, பறப்பது போன்றுதான் தோன்றுகிறது. இவ்விசயத்தில் அவர் மிகப்பெரிய பாய்ச்சலை கொண்ட வீரராகத் திகழ்கிறார். ஏனெனில், வான்வழியில் பந்தை கையாளும் போது காற்றில் மிதப்பது போன்றே அவர் உணர்கிறார். பாய்வதில் உள்ள நுட்பம் அவரை அதிகபட்ச நேரம் காற்றில் இருக்க அனுமதிக்கிறது. இது பந்தை துல்லியமாக வலைக்குள் தள்ள அவருக்கு உதவுகிறது. இந்த அம்சத்தில் லியோனல் மெஸ்சியைவிட ரொனால்டோ மிகவும் சிறந்தவராகத் திகழ்கிறார்.  

ஆனால் மெஸ்சியைப் பொறுத்தமட்டில், வான்வழியில் வரும் பந்தை கையாள்வதைத் தவிர மற்ற அனைத்திலும் சிறந்தவராக உள்ளார். அவர், தலையால் முட்டி சில கோல்களை அடித்திருந்தாலும், வான்வழியில் வலிமையானர் என்று கூற முடியாது. ஒருவேளை இன்னும் சில அங்குலம் உயரமானவராக இருந்திருந்தால் வான்வழியில் அவர் சிறப்பாக செயல்படக்கூடியவராக இருந்திருப்பார் என்பதில் ஐயமில்லை.  

4. Passing (பந்தை பிறருக்கு கடத்துவது ) 

மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு விளையாடிய காலக் கட்டங்களில் பந்தை பாஸ் செய்ய ரொனால்டோ அதிக ஆர்வம் காட்டியதில்லை. பந்தை அடுத்தவருக்கு கடத்துவதைவிட தானே Dribbling செய்வதை அதிகம் விரும்பினார். ஆனால், ரியல் மேட்ரிட் அணியில் அவரது விளையாட்டு பாணி கணிசமாக மாறிவிட்டது. தனது அணி வீரர்களை பயன்படுத்துவதை அதிகரித்துக் கொண்டார். ரொனால்டோ போன்ற திறமையான ஒரு வீரருக்கு பந்தை கடத்திச் செல்வதை படைப்பாற்றலாக கருத முடியாது. 

ஆனால், மெஸ்சி இதிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறார். அவரைப் போல சரளமாக பந்தை சக வீரர்களுக்கு அனுப்பும் வீரர்கள் உலகில் மிகவும் குறைவு. எதிரணியின் எந்தவொரு பாதுகாப்பு அரணையும் உடைத்தெறிந்து பந்தை சக வீரர்களுக்கு அனுப்பி கோலடிக்க வாய்ப்புகளை உருவாக்குவதில் மெஸ்சி தலைச்சிறந்தவர்.  பந்துடன் அவருக்குள்ள தொடர்பு மிகவும் நெருக்கமான சூழலில்கூட பந்தை பிறருக்கு பாஸ் செய்ய அவரை அனுமதிக்கிறது. மேலும் அவரது பருந்துப் பார்வை பந்தை திறம்பட பிறருக்கு கடத்த உதவுகிறது. எதிரணியின் தடுப்பாட்டக்காரர்கள் பலர் சூழ்ந்தாலும், அவர்களையும் மீறி பந்தை சக வீரர்களுக்கு கடத்துவதில் மெஸ்சி அசாத்திய திறமை படைத்தவர்.  

5. Pace (வேகம்) ரொனால்டோவைப் பொறுத்தவரையில், அவரது வேகம் எதிரணிக்கு எப்போதும் அச்சுறுத்தல் தான். ஒவ்வொரு தடுப்பாக்கட்டக்காரரையும் கடந்து செல்லும் அளவுக்கு நம்ப முடியாத வகையில் அவரது தொடை தசை வலிமையானது. இடம் கிடைக்கும்போது விரைந்து முன்னேறிச் செல்ல அவரது வேகம் கைகொடுக்கிறது. ஆனால், குறைந்த அளவே இடமிருக்கும்போது, அவரால் அரிதாகவே வேகமாக செயல்பட முடிகிறது.  

லியோனல் மெஸ்சியும் பந்துடன் வேகமாக செல்பவராக இருந்தாலும், அவரது ஸ்பிரிண்டிங் ஸ்டைல் முற்றிலும் வேறுபட்டது. உயரம் சற்று குறைந்தவராக இருப்பதால், உடனுக்குடன் திசை மாறி பந்தை கடத்திச் சென்று, எதிரணியின் பாதுகாப்பு அரணை உடைத்தெறிந்துவிடுவார்.                 

6. First Touch (முதல் தொடுதல்)

முதல் தொடுதல் என்பது ஒரு வீரரது திறமையின் இன்றியமையாத பகுதியாகும். ஒரு நல்ல முதல் தொடுதல் ஒரு புத்திசாலித்தனமான வீரரின் அடையாளமாகும். கொஞ்சம் கால்பந்து விளையாடிய எவருக்கும் உள்வரும் பாஸைக் கட்டுப்படுத்துவது எவ்வளவு கடினம் என்பது தெரியும்.  ரொனால்டோவின் முதல் தொடுதல் புத்திசாலித்தனமானது அல்லது சிறப்பானது எனச் சொல்ல முடியாவிட்டாலும், ஒழுக்கமானது எனச் சொல்ல முடியும். அவரால் பந்தை பெறவும் கட்டுப்படுத்தவும் முடியும். ஆனால், தொடர்ந்து அதனுடன் Space-ஐ உருவாக்க முடியாது. எனினும், முதல் தொடுதல் மூலம் வியக்கத்தக்க கோல்களை அடித்துள்ளதால் ரொனால்டோ போற்றப்படுகிறார். அதனை அவரால் மட்டுமே சிறப்பாகச் செய்ய முடிந்தது.  

முதல் தொடுதல் என வரும்போது மெஸ்சியை விட சிறந்த வீரர்கள் உள்ளனர். ஆனால், அவரை ஒரு மேதையாக்குவது அவரது நுட்பமான முதல் தொடுதல். முதல் தொடுதலிலேயே, அவர் தடுப்பாக்கட்டக்காரர்களை லாவகமாக கடந்து தனக்கென தனி இடத்தை உருவாக்குவதில் அசாத்திய திறமை படைத்தவர். இதுதவிர சக வீரர்களிடமிருந்து பந்தைப் பெறும்போது அவரது விழிப்புணர்வு நம்பமுடியாதது. ஆனாலும், இலக்கிற்கு அருகில் கோல் அடிப்பதற்கான அவரது முதல் தொடுதல் ரொனால்டோவைப் போன்று புகழ்பெற்றதாக இல்லை.  

7. Weaker-foot strength (பலவீனமான – கால் வலிமை)

ஷூட் என வரும்போது ரொனால்டோவின் வலது காலைப் போன்றே இடதுகாலும் வலுவானது. ஆனால், பலவீனமான ஒரு காலில் ஷாட் எடுக்கும்போது, பலரது கண்களும் வியந்துபோதும். ஆனால், dribbling என வரும்போது அவரது பலவீனமான கால் பலவீனமாகவே உள்ளது. Dribbling செய்யும்போது இரண்டு கால்களையும் பயன்படுத்தும் சான்டி காசோர்லா போல் ரொனால்டோவால் செயல்பட முடிவதில்லை.  

லியோனல் மெஸ்சி தனது வலது காலால் சில சிறந்த கோல்களை அடித்துள்ளார். மெஸ்சியின் பலவீனமான வலதுகால் ரொனால்டோவின் இடது காலைப் போன்று வலுவாக இல்லை என்றாலும், கோல் இலக்கை நெருங்கும்போது, அதிக செயல்திறனைக் கொண்டுள்ளது.

மெஸ்சி தனது வலது காலாலும் பந்தை நன்றாக கையாள்வதை பல போட்டிகளில் காண முடிகிறது. ஆனால், அதைத் தவிர மற்ற நீண்ட தூரங்களில் அவரது வலதுகால் கிட்டத்தட்ட வழக்கற்றுப் போய்விட்டது. மெஸ்சி தனது வலது காலை ஓடுவதற்கும் சமநிலைப்படுத்துவதற்கும் மட்டுமே பயன்படுத்துவது கண்கூடாகத் தெரிகிறது.