அயர்லாந்து சென்றது இந்திய கிரிக்கெட் அணி; நாளை முதல் டி20 போட்டி  

அயர்லாந்து சென்றது இந்திய கிரிக்கெட் அணி; நாளை முதல் டி20 போட்டி  

டப்ளின்: டி20 போட்டித் தொடரில் விளையாட ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து சென்றுள்ளது.  

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரை அடுத்து, இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.  முதல் போட்டி நாளையும் (ஆக.18) , 2ஆவது போட்டி ஆகஸ்ட் 20ஆம் தேதியும் கடைசி மற்றும் 3ஆவது போட்டி ஆகஸ்ட் 23ஆம் தேதியும் நடைபெறவிருக்கின்றன.

காயம் காரணமாக நீண்டகாலமாக ஓய்விலிருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் இந்திய அணி களம் காண்கிறது. துணை கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.  

கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், சஹல் உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.  ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, சஞ்சு சாம்சன், ஜிதேஷ் ஷர்மா, ரவி பிஷ்னோய், ஷபாஸ் அகமது, அர்ஷ்தீப்சிங், பிரசித் கிருஷ்ணா, முகேஷ் குமார், ஆவேஷ் கான் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.