UEFA சூப்பர் கோப்பை கால்பந்து; மான்செஸ்டர் சிட்டி முதன்முறையாக சாம்பியன்
கிரீஸ்: யூ.இ.எஃப்.ஏ சூப்பர் கோப்பை கால்பந்து போட்டித் தொடரில் மான்செஸ்டர் சிட்டி அணி பெனால்டி ஷூட் அவுட்டில் செவில்லா அணியை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால் போட்டி சமனானது. பின்னர் முடிவைத் தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் முதல் முயற்சியில் இரு அணிகளும் தலா ஐந்து கோல்கள் அடித்ததால், மீண்டும் பெனால்டி ஷூட் அவுட் கொண்டுவரப்பட்டது.
இதில் மான்செஸ்டர் சிட்டி அணி 5-க்கு 4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக UEFA சூப்பர் கோப்பையை வசப்படுத்தியது. தலைமை பயிற்சியாளர் பெப் கார்டியோலா தலைமையின் கீழ் மான்செஸ்டர் சிட்டி அணி வென்றிருக்கும் 15ஆவது சாம்பியன் பட்டம் இதுவாகும்.